சிவகார்த்திகேயனின் டார்கெட் விஜய்தான்! ‘மாவீரன்’ படத்திற்காக அவர் செய்ய போகும் சம்பவம்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன். விஜயின் வளர்ச்சி அசுர வளர்ச்சி என்றாலும் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்தில் இப்பேற்பட்ட வளர்ச்சியை அடைந்திருக்கும் சிவகார்த்திகேயனை பார்த்து வியக்காதவர்கள் இல்லை. ஏதோ ஒரு சேனலில் ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயனை காலம் சினிமா பக்கம் இழுத்தது.
சாதாரண துணை நடிகராக நடித்து அதன் பின் ஹீரோவாகி இப்போழுது மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவரின் வளர்ச்சியை பற்றி ஒரு சமயம் விஜயே மேடையில் புகழ்ந்து பேசினார். அதாவது விஜய்க்கு குழந்தைகள் ஃபேன்ஸ் அதிகம். அதை குறிப்பிட்டி ‘சிவகார்த்திகேயனை ஹிட்ஸை பிடிச்சிட்டாரு’ என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லி அகமகிழ்ந்தார்.
மேலும் விஜய் , அஜித் இவர்களுக்கு அடுத்தப்படியாக அந்த இடத்தை நிரப்ப போவது யார் என்ற போட்டியில் சிவகார்த்திகேயனும் இருக்கிறார். ஒரு பக்கம் விஜயை ரஜினியுடன் ஒப்பிட்டு பேசும் போது இந்தப் பக்கம் சிவகார்த்திகேயனை விஜயுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.
இருவருக்கும் ஓரளவு ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருவரது படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக அமைகின்றன. அதுமட்டுமில்லாமல் குழந்தைகள் விரும்பி பார்க்கும் நடிகர்களாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயனை பற்றி கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு நிலவி வருகின்றது.
அவர் இப்போது நடித்து வரும் மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜூலை 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாம். அந்த விழாவை ஒரு தனியார் இன்ஜினியர் கல்லூரியில் நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் சிவகார்த்திகேயனின் பெரும்பாலான படங்களின் இசை வெளியீட்டு விழா எப்பொழுதும் ஜேப்பியார் கல்லூரியில் தான் நடைபெறுமாம்.
ஆனால் இந்த முறை மாற்றியமைத்ததற்கு ஒரு வேளை விஜய் வழியில் சிவகார்த்திகேயனா? என்று கூறிவருகிறார்கள். ஏனெனில் அந்த கல்லூரியில் விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழாவும் அங்குதான் நடந்தது. ஆனால் அந்த நேரம் விஜயின் அரசியல் பேச்சால் சிக்கி பெரிய பிரச்சினையே ஏற்பட்டது. இனிமேல் இந்த கல்லூரியில் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்கள் நடத்தக் கூடாது என்ற உத்தரவும் போடப்பட்டது. ஆனால் அதை கல்லூரி நிர்வாகம் காற்றில் பறக்கவிட்டது.
மீண்டும் மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட உள்ளது. இதனை அடுத்து அவரின் நடிப்பில் தயாராகி வரும் மற்றுமொரு படமான அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். அந்த ஸ்டேடியத்தில் சமீபத்தில் தான் விஜயின் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவும் நடந்தது.
இதையும் படிங்க : 14 வயசுலையேவா.. விவரம் இல்லாமல் அந்த வயசுல பண்ணிட்டேன்!..மனம் திறந்த நடிகை…
போறத பார்த்தால் சிவகார்த்திகேயனும் நோட்டு புத்தகங்களை எடுத்து மாணவர்களை கூட்டி விழா நடத்திடுவார் போல என விஜயின் பாணியை பின்பற்றுகிறாரா சிவகார்த்திகேயன் என்று பேசி வருகின்றார்கள்.