14 வயசுலையேவா.. விவரம் இல்லாமல் அந்த வயசுல பண்ணிட்டேன்!..மனம் திறந்த நடிகை…

சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியான நடிகைகளில் முக்கியமானவர் சுலக்சனா. 1980 ஆம் ஆண்டு இவர் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்தது தூறல் நின்னு போச்சு என்கிற திரைப்படம்தான். இந்த படத்தில் இவர் நடிகர் பாக்கியராஜ்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தன்னுடைய 14 வது வயதிலேயே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் சுலக்ஷனா. தூரல் நின்னு போச்சு திரைப்படத்தில் வரும் அவரது மங்களம் என்கிற கதாபாத்திரம் அப்போது வெகுவாக பேசப்பட்டது. அந்தப் படத்திற்குப் பிறகு அதிக பட வாய்ப்புகளை பெற்றார் சுலோக்ஷனா.

அதனைத் தொடர்ந்து ஆயிரம் நிலவே வா போன்ற பல படங்களில் நடித்தார் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு ,கன்னடம், மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் அப்போது நடித்து வந்தார். சுலக்ஷனா வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு எல்லாமே மிகவும் சீக்கிரமாகவே நடந்தது

எல்லாமே சீக்கிரம் நடந்துடுச்சு:

மிகச் சிறுவயதிலேயே சினிமாவில் நடிகையாக நடிக்க தொடங்கினார். அதேபோல தனது 18 வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டார் சுலோக்ஷனா. அடுத்த ஐந்து ஆண்டுகளில் திருமண வாழ்க்கை விட்டு விலகினார் அவரது 23 வது வயதில் விவாகரத்து வாங்கினார்.

எனவே இது எல்லாமே மிகவும் வேகமாக அவரது வாழ்க்கையில் நடந்தது. இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் பொழுது அந்த வயதில் எனக்கு முடிவெடுக்கும் திறன் அவளவாக இல்லை. மற்றவர்களைப் போல நானும் வயது கோளாறில் ஏதோ செய்து விட்டேன் ஆனால் பிறகுதான் அவையெல்லாம் தவறு என எனக்கு தெரிந்தது என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அப்படி ஒண்ணும் மானங்கெட்டு நடிக்கணும்னு அவசியமில்லை… டான்ஸ் மாஸ்டர் செயலால் கடுப்பான நடிகை!..

 

Related Articles

Next Story