சிவகார்த்திகேயனின் 25வது படம் இந்த படத்தின் இரண்டாம் பாகம்!.. செமயா ஸ்கெட்ச் போட்ட எஸ்.கே..
Ayalaan 2: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததில் ஓவர் நைட்டில் முன்னணி நடிகராக மாறினார். அவருக்கு பல வருடங்கள் சீனியராக இருந்த தனுஷ், சிம்பு, விஷால், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி போன்ற நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
அதாவது ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன் இருந்தார். அவரின் படங்களை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கும்படி பார்த்துகொண்டார். ஏனெனில், குழந்தைகளுக்கு யாரை பிடிக்கிறதோ அவரே சூப்பர் ஸ்டார் என்கிற ரூட்டில் பயணித்தார். சில படங்கள் சறுக்கினாலும் அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்துவிடுகிறார்.
இதையும் படிங்க: தலைப்புக்காகவே ரஜினி நடித்த படம்!.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு செண்டிமெண்ட்டா?!..
பொங்கலுக்கு வெளியான அயலான் படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த படமாக இருக்கிறது. ஏலியன் பூமிக்கு வரும் சயின்ஸ் பிக்சனாக வெளிவந்த இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியிருந்தார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த கதை நிச்சயம் புதுசுதான்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்நிலையில், அயலான் 2 படத்தை எடுக்கும் ஆசை சிவகார்த்திகேயனுக்கு வந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் கேஜிர் ஸ்டுடியோஸ், எஸ்.கே, ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்போது அயலான் 2 எடுப்பது என்பது உறுதியானது.
இதையும் படிங்க: என் ராசா.. நீதான் என் புருஷன்!.. திடீரென எம்.ஜி.ஆரை கட்டிப்பிடித்த பெண்.. எப்போது நடந்தது தெரியுமா?..
VFX மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் படத்தின் பட்ஜெட் ரூ.50 கோடி என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தை கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் PhantomFX என்கிற VFX நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்போது இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைக்கும் பணியில் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார்.
இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவே இந்த செய்தியை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அனேகமாக இந்த படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: தனுஷை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்தியேன்!.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அயலான் டீம்!