Connect with us
kavin

Cinema News

கவின் மட்டுமல்ல.. விஜயுடனும் நடிக்கும் சிவகார்த்திகேயன்!.. எவ்வளவு சைலைண்டா இருந்திருக்காங்க!…

விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் பலர். சந்தானம், சிவகார்த்திகேயன், சங்கர், மா.கா.பா, கவின், அறந்தாங்கி நிஷா, ராமர், ரியோ ராஜ் என சொல்லிகொண்டே போகலாம். இதில், ஹீரோவாக ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். அவருக்கு அடுத்து கவின் முன்னேறிக்கொண்டிருக்கிறார். ஒருபக்கம் ரியோவும் ‘ஜோ’ எனும் ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்.

இதில் கவின் விஜய் டியில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஒரு கட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். பீட்சா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தார். ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது.

இதையும் படிங்க: வைரமுத்துவுடன் போட்டி போட்ட ஏ.ஆர்.ரகுமான்!.. ஷங்கர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!.. செம அப்டேட்!..

லிப்ட் திரைப்படம் அவரை ஒரு முழு ஹீரோவாக மாற்றியது. அதன்பின் அவர் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தின் வெற்றி கவினுக்கு பல பட வாய்ப்புகளையும் பெற்று தந்திருக்கிறது. அந்த வரிசையில் உருவாகியுள்ள முதல் ஸ்டார்.

இளம் இயக்குனர் இளன் இயக்கியுள்ள திரைப்படம். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒரு காட்சியில் கவின் பெண் வேடத்திலும் நடித்திருக்கிறார். இந்த புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: இயக்குனர் செய்த அந்த சதி வேலை… விரட்டி அடித்த இளையராஜா… நடந்தது இதுதான்..!

இந்நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்த படம் சினிமா தொடர்பான கதை என்பதால் சிவகார்த்திகேயன் நடிகராகவே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வெங்கட்பிரபு இயக்கி வரும் கோட் படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்து வருகிறாராம்.

படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் வரும் காட்சியின் படப்பிடிப்பு சென்னையில் இப்போது நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதிக்கு பின் கேமியோ வேடத்தில் அதிகம் நடிக்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் மாறி வருவது குறிப்பிடத்தக்கது

google news
Continue Reading

More in Cinema News

To Top