சின்ன பையன் மாதிரி மாறிட்டாரே சிவகார்த்திகேயன்!.. வெள்ள நிவாரணத்துக்கு இத்தனை லட்சம் கொடுத்துட்டாரே!..

by Saranya M |
சின்ன பையன் மாதிரி மாறிட்டாரே சிவகார்த்திகேயன்!.. வெள்ள நிவாரணத்துக்கு இத்தனை லட்சம் கொடுத்துட்டாரே!..
X

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் இன்னமும் வெள்ளம் வடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி முதல் ஆளாக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.

இந்த முறை நடிகர் விஜய் அரசியல் ஆர்வம் கொண்டிருப்பதால், அவர் தனியாக தனது மக்கள் இயக்கத்தினரை வைத்து பல இடங்களில் நேரடியாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய அறிவுறுத்தியுள்ளார். அவரது பெயரில் அன்னதானம் வழங்குவது, துப்புறவு தொழிலாளர்களுக்கு புதிய உடைகளையும் அரிசிகளையும் வழங்குவது, அவர்கள் பாதங்களுக்கு அபிஷேகம் செய்வது என விஜய் மக்கள் இயக்கத்தினர் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: யார் வந்தாலும் போனாலும் இது எங்க கோட்டை! கோலிவுட்டை கலக்கும் சீனியர் நடிகைகள்

நடிகர் ரஜினிகாந்த் இதுவரை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து எந்தவொரு ட்வீட்டோ நிதியுதவியோ வழங்கவில்லை. நடிகர் அஜித் அமீர்கானை காப்பாற்றியதுடன் நிறுத்திக் கொண்டார் என்கின்றனர். ஆனால், ரஜினி மற்றும் அஜித் விளம்பரம் செய்யாமல் பல நலத்திட்ட உதவிகளை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி எல்லாம் எங்கேப்பா ஆளே காணோம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் எல்லாம் ஒரு லட்சம் நிதியுதவி அளித்து நல்ல பெயரை வாங்கிக் கொண்டார்.

இதையும் படிங்க: நயன்தாராவை தொடர்ந்து அந்த பிசினஸில் இறங்கிய சமந்தா!.. தலையில துண்டு போடாமல் இருந்தால் சரி!..

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நேற்று இரவு திடீரென உதயநிதி ஸ்டாலினை சந்தித்து 10 லட்சம் ரூபாய் நன்கொடையை வழங்கி உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அதுகுறித்து போட்ட ட்வீட்டில் சிவகார்த்திகேயன் செம யங்கான லுக்கில் சின்ன பையன் போல இருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள் மீண்டும் டான் படத்தில் வருவதை போல ஸ்கூல் பாயாக நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story