Connect with us
nayan

Cinema News

யார் வந்தாலும் போனாலும் இது எங்க கோட்டை! கோலிவுட்டை கலக்கும் சீனியர் நடிகைகள்

Tamil Actresses: சினிமாவைப் பொறுத்தவரைக்கும் ஒரு நடிகைக்கு திருமணம் ஆனதும் அவரின் மார்கெட் சரிந்து விடும். ஆனால் அந்தக் காலத்தில் பெரும்பாலான நடிகைகள் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகே நடிக்க வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல சீனியர் நடிகைகள்தான் முன்னணியில் இருக்கின்றனர். அவர்களின் படங்கள்தான் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 நயன்தாரா: கிட்டத்தட்ட 20 வருடமாக கோலிவுட்டை கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா. திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு இன்று ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான அன்னபூரணி திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: நடிகையர் திலகம்னா சும்மாவா!. சூட்டிங் முடிந்ததுமே அம்மணிக்கு கிடைத்த மரியாதையைப் பாருங்க!

த்ரிஷா: த்ரிஷாவும் இந்த சினிமாவிற்குள் வந்த 20ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யாராயே தோற்றுப் போகும் அளவிற்கு அழகுப் பதுமையாக வந்தார். அதன் பிறகு விஜயுடன் இணைந்து லியோவில் கலக்கினார். இப்போது அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படி முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக இன்றளவும் ஜொலித்து வருகிறார்.

காஜல் அகர்வால்: விஜய், சூர்யா என பல முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த காஜல் திடீரென தனது திருமணத்தை அறிவித்தார். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறந்ததும் உடல் எடை அதிகரித்து காணப்பட்ட காஜல் தன் எடையை குறைத்து இப்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் பிஸியான நடிகையாகவே இருக்கிறார் காஜல்.

இதையும் படிங்க: வடிவேல் எவ்ளோ கேவமலமானவர் தெரியுமா?!.. புட்டு புட்டு வைக்கும் காமெடி நடிகர்..

தமன்னா: தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாடலில் ஆடி மிகப்பெரிய அளவில் ரீச்சை உண்டாக்கினார் தமன்னா. கோலிவுட்டில் தலை காட்டவில்லை என்றால் தன்னை எப்பொழுதும் பிஸியாக வைத்திருக்கும் நடிகையாகவே ரசிகர்கள் முன் காட்டி வருகிறார். இன்ஸ்டாவில் விதவித புகைப்படங்களை போட்டு உற்சாகப்படுத்தி வருகிறார். ஹிந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா: திருமணமாகி விவாகரத்து ஆன சமந்தாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு புஷ்பாவில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கவர்ச்சி நடனத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் லீடு ரோலில் நடித்தார். கடைசியாக குஷி படத்தில் நடித்ததன் மூலம் மேலும் ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தனர். தற்காலிமாக சமந்தா ஓய்வு எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: இனிதே நடந்து முடிந்த ரெடின் கிங்ஸ்லி திருமணம்! இந்த நடிகைதான் மனைவியா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படம்

பல புது புது நடிகைகள் அறிமுகமானாலும் பெரிய அளவிலான பட்ஜெட் படங்களில் ஆதிக்கம் செலுத்துவது இந்த சீனியர் நடிகைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top