விஜயாக மாற ஆசைப்பட்டு பல கோடி கடன்.. சிவகார்த்திகேயனுக்கு இது தேவையா?.....

by சிவா |   ( Updated:2021-10-10 06:31:19  )
sivakarthikeyan
X

தமிழ் சினிமாவில் வளரும் நேரத்தில் அகல கால் வைத்து தான் நடிக்கும் தானே தயாரிப்பாளராக மாறி கடனாளி ஆனவர் சிவகார்த்திகேயன். ரெமோ படத்தில் இருந்து இந்த பிரச்சனை துவங்கியது. இதன் காரணமாக அவருக்கு நெருக்கமான அதாவது சிவகார்த்திகேயனை ஒரு ஹீரோவாக உருவாக்கிய ராஜா என்பவரை விட்டு பிரிந்தார். அப்போது 20 கோடி கடனில் இருந்தார் சிவகார்த்திகேயன்.

எனவே, சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் நடித்துக்கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அதை அவர் செய்யாததால் அவர் நடிப்பில் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் பைனான்சியர்கள் அவருக்கு பிரச்சனை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கே.ஆர்.ராஜேஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து உருவான ஹீரோ படம் வெளியான போதும் பைனான்சியர்கள் சிவகார்த்திகேயனை நெருக்கினர்.

sivakarthikeyan

எனவே, லைக்காவுக்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக கூறி அந்த பிரச்சனையை தீர்த்தார் சிவகார்த்திகேயன். சீமத்துரை படத்தாலும் சிவகார்த்திகேயனுக்கு பல கோடிகள் நஷ்டம். தற்போது ‘டாக்டர்’ திரைப்படம் வெளியான போதும் மீண்டும் பஞ்சாயத்து வந்தது.

அதோடு, டாக்டர் பட நெகட்டிவ் மீது அப்பட தயாரிப்பாளர் கே.ஆர். ராஜேஷ் வாங்கிய 27 கோடி கடனை அவர் கட்டவில்லை. எனவே, அந்த கடனை நானே அடைக்கிறேன் என சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்ட பின்பே டாக்டர் படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல பைனான்சியரான அன்பு செழியன் அந்த ரூ.27 கடனை கொடுத்துவிட்டு, எனக்கு இந்த பணத்தை நீங்கள் திருப்பி தர வேண்டாம். அதற்கு பதில் லைக்காவுக்கு ஒரு படம் நடித்து கொடுக்குமாறு அன்பு கூற அதை ஏற்றுக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

doctor2

ஏற்கனவே, கே.ஆர்.ராஜேஷ் தயாரிப்பில் ‘சிங்கப்பாதை’ என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்தார். ஆனால், டாக்டர் பிரச்சனையை அவர் சரியாக கையாளவில்லை என்பதால் அப்படத்தை லைக்காவுக்கு கை மாற்றிவிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலையை மட்டும் பார்த்தால் அவர் கடனாளி ஆகியிருக்க மாட்டார். தேவையில்லாமல் அகலகால் வைத்து தயாரிப்பில் இறங்கி சிக்கலுக்கு உள்ளானார். சினிமாவில் விஜய் போல ஒரு மாஸ் கமர்சியல் ஹீரோவாக வேண்டும் என ஆசைப்பட்டார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan-2

எனவே, தன்னை புரமோட் செய்யவே அவர் பல கோடிகள் செலவழித்தார். சீமராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு மட்டும் பல கோடிகள் செலவு செய்தார். இப்படி பல கோடி கடன்கள் அவரை தொடர்ந்து கொண்டே இருந்தால் அவர் கடனிலிருந்து மீளவே மாட்டார் என விபரம் தெரிந்த சினிமாத்துறையினர் கூறி வருகின்றனர்.

மொத்தத்தில் டாக்டர் படம் மூலம் மீண்டும் கடனாளி ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன்!..

Next Story