நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வருகிற 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் ஜெயிலர் படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்றும், அதுவும் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்றும் பத்திரிக்கையாளர் கோடாங்கி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இயக்கநர் நெல்சனும், நடிகர் சிவகார்த்திகேயனும் பல ஆண்டுகளாக நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்க- கவுதம் மேனனின் புதிய படத்தில் ஹீரோ அவரா?… ஒரே மாமன்னனுக்கே இவ்வளவு அக்கப்போரு!..
சிவகார்த்திகேயனின் தந்தை ஒரு நேர்மையாக போலீஸ் அதிகாரி, ஜெயிலராகவும் அவர் இருந்திருக்கிறார். அவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மாட்டார்கள். ஏனென்றால், அதில் பல சிக்கல்கள் உள்ளது. உண்மை சம்பவம் என்று கூற படத்தை எடுத்தால், சென்சார் போட்ரில் சம்மந்தப்பட்டவர்களிடம் noc எனும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
சிவகார்த்திகேயன் அதற்கு சம்மதித்தாலும், மற்ற அதிகாரிகள் அதற்கு ஒற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே உண்மை சம்பவம் என்று கூறாமல் தான் படத்தை வெளியிடுவார்கள். பல அதிகாரிகளின் உண்மை முகம் வெளியே தெரிந்துவிடும் என்பதாலும் இதனால் வேறு பல பிரச்சனைகள் வரும் என்பதாலும் அதிகாரப்பூர்வமான இதை செய்ய முடியாத நிலை உள்ளது என்று பத்திரிக்கையாளர் கோடாங்கி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- ரஜினி-கமலை ரீ கிரியேட் பண்ணி எடுத்தப் படம்தான் அது! 15 வருட சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகர்
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…