ஸ்லீவ்லெஸ் உடையில் சிவகார்த்திகேயன் ஹீரோயின்!.. பார்த்தாலே சும்மா ஜில்லுன்னு இருக்கே!..

by Saranya M |   ( Updated:2024-04-14 11:03:15  )
ஸ்லீவ்லெஸ் உடையில் சிவகார்த்திகேயன் ஹீரோயின்!.. பார்த்தாலே சும்மா ஜில்லுன்னு இருக்கே!..
X

கன்னட நடிகையான ருக்மினி வசந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் தமிழ் புத்தாண்டு அதுவுமாக ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்க காரணமாக அமைந்துள்ளது.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த ருக்மினி வசந்த் 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பீர்பால் டிரைலஜி படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கன்னட ரசிகர்களை கவர்ந்த அவருக்கு உடனடியாக பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: சும்மா சும்மா போஸ்டர் விடும் சூர்யா!.. புத்தாண்டு அதுவுமா கடுப்பான ஃபேன்ஸ்?.. கங்குவா ரிலீஸ் எப்போ?

அப்ஸ்டார்ட்ஸ் எனும் இந்தி படத்தில் நடித்த ருக்மினி வசந்த் அடுத்ததாக கன்னட திரையுலகில் பல பெரிய பட வாய்ப்புகள் கிடைக்க கன்னட திரையுலகில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ மற்றும் சைட் பி என இரு பாகங்களாக வெளியான படங்களில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார்.

மேலும், கன்னடத்தில் உருவாகி வரும் பகீரா, பைரதி ரணங்கள் படங்களில் நடித்து வரும் அவருக்கு விஜய்சேதுபதியின் 51வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 23வது படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு போட்டியா வெயிட்டா டீசரையே இறக்கிய மைக் மோகன்!.. அடடா.. ஹரா படத்துல கை விளையாடுது கன்ல!..

27 வயதான இளம் நடிகை ருக்மினி வசந்த் தேர்ந்த நடிப்பை ஒவ்வொரு படங்களிலும் வழங்கி வரும் நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு க்யூட்டான ஜோடியாக இணைந்திருக்கிறார்.

வரா எனும் மாத இதழின் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்துள்ள ருக்மினி வசந்த் ஸ்லீவ்லெஸ் உடையில் அழகான சிலை போல காட்சியளிக்கும் போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அளித்துள்ளார்.

இதையும் படிங்க: கோட் படம் வெங்கட் பிரபு யூனிவர்ஸா!.. அதுக்குத்தான் அஜித், சூர்யா, சிம்பு பட ரெஃபரன்ஸ் இருக்கா?..

Next Story