‘கொட்டுக்காளி’ டிரெய்லர் லாஞ்சில் ‘தல’ லுக்கில் சிவகார்த்திகேயன்! கொல மாஸ்

by Rohini |   ( Updated:2024-08-13 05:49:53  )
siva
X

siva

Sivakarthikeyan: ஆரம்பத்தில் துணை நடிகராக தன் சினிமா பயணத்தை ஆரம்பித்து இன்று கோலிவுட்டே கொண்டாடும் ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு நடிகராக தயாரிப்பாளராக பாடலாசிரியராக என பன்முக திறமைகள் கொண்ட கலைஞனாக மக்கள் கொண்டாடும் ஒரு மனிதராக இருந்து வருகிறார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. படம் அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது. அமரன் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக்காகத்தான் தயாராகியிருக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஓயாம அடுத்த பாகம் எடுக்க முடியுமா? யாரங்க அருள்நிதி சொல்றீங்க…

இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இதற்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்புதான் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ஒரு புதிய லுக் இன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன் தயாரிக்க சூரி நடிக்கும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தில் சூரியுடன் இணைந்து மலையாள நடிகையாக அன்னாபென் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஒன்னுல மூணு… மீனா, முத்துக்கு ஓவர் லவ்தான்ல!.. அடங்காத ஈஸ்வரி… சிக்கிய ராஜீ!..

ஆணாதிக்கம், வறுமை, தீண்டாமை போன்ற அம்சங்கள் உள்ளடக்கிய படமாக ஒரு வாழ்வியல் கருத்தை சொல்லும் படமாகத்தான் இந்த கொட்டுக்காளி திரைப்படம் தயாராகியிருக்கிறது. படம் பெர்லின் திரைப்பட விருது விழாவில் பங்கேற்று எண்ணற்ற விருதுகளை அள்ளிய படமாகும்.

siva1

siva1

அதனால் கொட்டுக்காளி திரைப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது .அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் ஒரு தயாரிப்பாளராக படு மாஸாக வந்து இறங்கியிருக்கிறார். அப்படியே தல லுக்கில் காணப்படுகிறார் சிவகார்த்திகேயன். அஜித்தின் முடி மற்றும் தாடிக்கு கருப்பு நிறம் அடித்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி லுக்கில் இருக்கிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன நடிகர் திலகம்..! பதுங்கினால் பூனை… பாய்ந்தால் புலி !

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C-mRgLxoYUH/?utm_source=ig_web_copy_link

Next Story