சிவகார்த்திகேயனை அரவணைக்கும் கமல்ஹாசன்.! பின்னணியில் பல காரணங்கள்.!
நேற்று இணையத்தில் ஒரு ஆச்சரியமான நிகழ்வு ஏற்பட்டது. அதாவது, கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்னர் இருவருக்கும் அந்த விவகாரம் தொடர்பாக மன வருத்தம் இருந்தது அனைவருக்கும் தெரியும்.
மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் ரசிகர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டது பெரும் பேசுபொருளானது. அந்தச் சம்பவத்திற்கு காரணமாக, சிவகார்த்திகேயன் தனது படத்தில் கமலை இமிடேட் செய்வது போல வசனம் பேசியதாகவும், ஒரு பொது விழா நிகழ்ச்சியில் கமல் மகளை தவறாக பேசியது போலவும் கமல் ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு சிவகார்த்திகேயனை தாக்கிவிட்டனர்.
இந்த விவரம் அறிந்த கமல்ஹாசன், அப்போது தனது நண்பர்கள் மூலம் தனது வருத்தத்தை சிவகார்த்திகேயனுக்கு தெரிவித்து விட்டார். தற்போது மேலும் ஒரு படியாய் அந்த களங்கத்தை துடைக்கும் வண்ணம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். இந்த படத்தை ரங்கூன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.