டிவிட்டரை விட்டு போக ரஜினிதான் காரணமா?.. நெருக்கடியில் சிக்கிய சிவகார்த்திகேயன்!..

ரஜினிகாந்தை மானசீக குருவாக கொண்டு தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆனால் இயக்குனர் பொன்ராமால்தான் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் இரண்டு திரைப்படங்களுமே நல்ல வெற்றி கொடுத்த திரைப்படங்கள். அதற்கு நடிகர் சூரியும் ஒரு காரணம் என கூறலாம்.

ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கூட அதிகமாக ரஜினியின் சாயலை பார்க்க முடியும். தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11 அன்று வெளியாக இருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு வந்த பிரச்சனை:
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் டிவிட்டரில் இருந்து விலகினார். கொஞ்ச நாளைக்கு தனது டிவிட்டர் கணக்கை அட்மின்கள் பார்த்துக்கொள்வார்கள் என கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறி ஐந்தாவது நாள் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி அதாவது மாவீரன் திரைப்படத்திற்கு முந்தைய நாள் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்தோடு எப்படி போட்டி போட முடியும் என தர்மசங்கடத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த விஷயம் முன்பே தெரிந்துதான் அவர் டிவிட்டரைவிட்டு விலகிவிட்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
இதையும் படிங்க: அலைபாயுதே நான் எடுத்த படம்தான்!.. சர்ச்சையை கிளப்பிய கெளதம் மேனன்…