அந்த இயக்குனர் படத்துக்கு ரெடியான சிவகார்த்திகேயன்!. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!...

Actor sivakarthikeyan: விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் சிவகார்த்திகேயன். பல மேடைகளில் மிமிக்ரியும் செய்து வந்தார். மெரினா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். எதிர் நீச்சல் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அவரை உச்சத்திற்கு கொண்டு போனது.
அந்த படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை முன்னணி நடிகராக மாற்றியது. அதன்பின் ரெமோ, ரஜினி முருகன் என அடித்து ஆடினார். குறைந்த காலத்திலேயே பெரிய நடிகராக மாறி தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, சூர்யா, கார்த்தி, விக்ரம் போன்ற நடிகர்களுக்கே டஃப் கொடுத்தார்.
இதையும் படிங்க: காளையுடன் சண்டை போடுவார்னு பாத்தா? சூர்யாவை ப்ளே ஸ்டேசனில் தள்ளிவிட்டு வேடிக்கை காட்டும் சிறுத்தை சிவா
ரஜினி, விஜயை போல இவருக்கும் ஏராளமான குழந்தைகள் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதுவே அவருக்கு பெரிய வெற்றியாக இருக்கிறது. டாக்டர், டான் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார். இப்போது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
இந்நிலையில், எ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இது தொடர்பான செய்தி ஏற்கனவே வெளியானது. ஆனால், அதன்பின் எந்த தகவலும் வெளியாகவில்லை. தர்பார் படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை.
இதையும் படிங்க: கமலுக்கே அல்வா கொடுக்க நினைத்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சி வாழ்நாள் தண்டனையை கொடுத்த ஆண்டவர்..
இன்று முருகதாஸின் பிறந்தநாள் என்பதால் டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன் ‘என்னுடைய 23வது படத்தில் உங்களுடன் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் நீங்கள் சொன்ன கதையை கேட்டதும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த படம் கண்டிப்பாக எனக்கு ஒரு ஸ்பெஷல் படமாக இருக்கும். படப்பிடிப்பு துவங்க ஆர்வமாக இருக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் கூறியுள்ள முருகதாஸ் ‘ நன்றி சிவா. உங்களுடன் அடுத்த படத்தில் இணைவது மகிழ்ச்சி. இரண்டு பேரும் இணைந்து ஒரு நல்ல சினிமா அனுபவத்தை கொடுப்போம்’ என பதிவிட்டுள்ளார். இதைப்பார்க்கும்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒன்னா களமிறங்கும் தல தளபதி… யாரும் சண்டை மட்டும் போட கூடாதுப்பா…