சின்னத்திரையில் ஆங்கர், சினிமாவில் சின்ன சின்ன வேடம்.. அதன்பின் ஹீரோ என படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. குறுகிய காலத்திலேயே இவருக்கு முன்னால் சினிமாவுக்கு வந்த பல சீனியர் நடிகர்களையும் ஓவர்டேக் செய்து மேலே போனார். அதாவது, அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார்.
ஒருகட்டத்தில் ரஜினி, விஜய், அஜித்துக்கு பிறகு அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் மாறினார். அதேநேரம் ஒரு வெற்றிக்கு பின் ஒரு தோல்வி என அமைந்துவிடுவதால் சம்பளம் ஏறுவது, இறங்குவது என மாறி மாறி வருகிறது.. சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த பத்தாம் தேதி வெளியான பராசக்தி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன் இந்நிலையில் நடிகர் சதீஷ் நடிக்கும் ஒரு புதிய படம் தொடர்பான விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.. அதில் நீண்ட தலைமுடி, தாடியுடன் இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இது வெங்கட் பிரபுவின் படத்திற்கான கெட்டப் என்று சொல்லி வருகிறார்கள்.





