வில்லன் வேஷத்துக்கு வேற ஆள் கிடைக்கலையா.?! சிவகார்த்திகேயனை நொந்து கொள்ளும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக அவரது 20வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் இப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சாய் பல்லவி அவருக்கு ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
இதனை தொடர்ந்து மண்டேலா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க ஓகே சொல்லி உள்ளாராம்.
மண்டேலா திரைப்படத்தில் அரசியல் பேசிய இயக்குனர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதே ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இது போதாதென்று தற்போது கூடுதல் ஆச்சரியமாக ஒரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன் - சமந்தாவின் பெரிய வாய்ப்பை தட்டி பறித்த நயன்தாரா.? எல்லாம் 'அந்த' நபரின் சிபாரிசு தான் காரணமாம்.!?
அதாவது, இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். மிஷ்கின் அதிகமாக பேச மாட்டார் அப்படி பேசினாலும் கலகலப்பாக பேச மாட்டார். அவர் மேடை பேச்சு சர்ச்சைகளின் முடிவடைந்திருக்கிறது.
இப்படி இருக்க மிஷ்கினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் படத்தில் எப்படிப்பட்ட காட்சிகள் இருக்கும்? அது செட் ஆகுமா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். இருந்தாலும் இயக்குனர் கதை களம் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக கமிட் செய்துள்ளார் என்று பரவலாக கூறப்படுகிறது.