Connect with us

SK: திருச்செந்தூரில் மொட்டை! குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

latest news

SK: திருச்செந்தூரில் மொட்டை! குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தன் மகன்கள் இருவருக்கும் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பராசக்தி. அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி அந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு அடுத்து சிவகார்த்திகேயன் தாய் கிழவி பட இயக்குனருடன் இணைய இருக்கிறார். அது அவருடைய 26 ஆவது திரைப்படமாக இருக்கும்.

இந்த நிலையில் தன்னுடைய மகன்கள் இருவருக்கும் திருச்செந்தூரில் மொட்டை அடித்து அவருடைய வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் சிவகார்த்திகேயன். சினிமாவில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்கும் வகையிலும் சிவகார்த்திகேயன் ஒரு நல்ல கணவனாக ஒரு நல்ல அப்பாவாக இருந்து வருகிறார்.

தன்னுடைய மனைவி மகள் மகன்கள் இருவருடன் சேர்ந்து இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. தன்னுடைய மகன்களுக்கும் ஒரு ஹீரோவாகத்தான் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட தன்னுடைய மகனுடன் போஸ் கொடுக்கும் ஒரு புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது.

To Top