கமல் படத்தில் சம்பளம் அத்தனை கோடியாம்!... கேட்டதும் ஓகே சொன்ன சிவகார்த்திகேயன்....
நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. இதில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த தகவல் நேற்று வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஏன் ஒத்துக்கொண்டார் என்பதற்கு சில காரணங்கள் இருக்கிறது. சிவகார்த்திகேயன் 20 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார். டாக்டர் பட வெற்றிக்கு பின் அவர் தனது சம்பளத்தை ரூ.30 கோடியாக உயர்த்தினார். ஆனாலும், பேரம் பேசும்போது ரூ.25 கோடியில் வந்து முடியும்.
ஆனால், கமல் -சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அவருக்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, இப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும், சிவகார்த்திகேயனும் பல வருடங்களாக விஜய் டிவியில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். பல வருட பழக்கம். அதோடு, கமல்ஹாசனின் கூட்டு தயாரிப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் ஓகே சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன். சுமார் 50 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.