சூரியோட சோலி முடிஞ்சது!.. ஸ்கெட்ச் போட்டு கவுத்தாரா சிவகார்த்திகேயன்?!.. அடப்பாவமே!...
kottukkaali :தமிழ் சினிமாவில் கடந்த 12 வருடங்களுக்கும் மேல் காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சூரி. மதுரையை சேர்ந்த சூரி சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தார். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பொழைப்பை ஓட்ட வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பு அடிப்பது, பெயிண்ட் அடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார்.
பல கட்ட முயற்சிகளுக்கு பின் சில படங்களில் கதாநாயகனின் நண்பர்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைக்கும். சரியான வருமானம் இல்லாமல், சாப்பாடு இல்லாமல் கூட கஷ்டப்பட்டார். இயக்குனர் சுசீந்திரன் மூலம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம் பெற்ற பரோட்டா சாப்பிடும் காமெடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: இந்த மொக்க படத்துக்கு இவ்வளவு பில்டப்பா?!.. கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனம்!….
அதன்பின் ரசிகர்களால் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார். அந்த படத்திற்கு பின் கிராமத்திய கதை என்றாலே லுங்கி கட்டிக்கொண்டு சூரி காமெடியனாக நடிப்பார். புஷ்பா புருஷன் உள்ளிட்ட பல காமெடிகள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள் சூரியை ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானது. அதன்பின்னர்தான் வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் சூரியை கதையின் நாயகனாக மாற்றினார். அந்த படம் ஹிட் அடித்தது. இப்போது விடுதலை 2 உருவாகி வருகிறது.
இதற்கிடையில் சூரி நடிப்பில் வெளிவந்த கருடன் படமும் சூப்பர் ஹிட் அடித்து சூரியின் மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறது. இப்போது 8 கோடி சம்பளம் வாங்கும் ஒரு ஹீரோவாக மாறியிருக்கிறார் சூரி. அடுத்தடுத்த படங்கள் அவரின் கையில் இருக்கிறது. இந்நிலையில்தான் சூரியின் நடிப்பில் வினோத்ராஜ் என்பவர் குறும்படம் போல இயக்கியிருக்கும் கொட்டுக்காளி படம் 23ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்திருக்கிறார்.
ஆனால், இந்த படம் நன்றாக இல்லை. ஒரு திரைப்படம் போலவே இல்லை. சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை. குறும்படம் போல இருக்கிறது. படம் மொக்கையாக இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக ஓடாது என இப்படத்தை பார்த்த சினிமா செய்தியாளர் பயில்வான் ரங்கநாதன் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
இதையடுத்து, சூரியின் மார்க்கெட் மேலே போவதை பொறுத்துகொள்ள முடியாமல் சிவகார்த்திகேயன்தான் கொட்டுக்காளி படம் மூலம் அவரின் மார்க்கெட்டை சரிக்க திட்டம் போட்டிருக்கிறார் என நெட்டிசன்கள் சொல்ல துவங்கிவிட்டனர். ஆனால், அப்படியெல்லாம் இல்லை. சூரியின் வளர்ச்சி மீது அக்கறை கொண்டவர் எஸ்.கே என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.
கொட்டுக்காளி திரைப்படம் சூரியின் மார்க்கெட்டை உயர்த்துமா இல்லை இறக்குமா என்பது இன்னும் 3 நாட்களில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: இந்த மொக்க படத்துக்கு இவ்வளவு பில்டப்பா?!.. கொட்டுக்காளி படத்தின் முதல் விமர்சனம்!….