என் பொண்டாட்டி கூட மட்டும்தான் சந்தோஷமா இருக்கேன்! புரிஞ்சுதா? SK வெளியிட்ட வீடியோவின் பின்னணி

by Rohini |
siva
X

siva

தமிழ் சினிமாவில் இன்று ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று கோலிவுட்டில் பெரிய நடிகர்களாக இருக்கும் நடிகர்களில் சிவகாத்திகேயனின் மார்க்கெட் தான் உயர்ந்து இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அடுத்தடுத்த படங்களின் மூலம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் வைத்துக் கொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது அமரன் மற்றும் ஏ ஆர் முருகதாசுடன் ஒரு புதிய படம் என பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் கைவசம் இன்னும் ஏராளமான படங்கள் இருக்கின்றன. இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். எப்படியாவது அஜித் விஜய் இவர்களுக்கு அடுத்தபடியான இடத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி இவருடைய பயணத்தை தொடர்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. தன் மூன்றாவது மகனுக்கு பவன் என பெயர் சூட்டி இருந்தார் சிவகார்த்திகேயன். அது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பிரபலங்களை பொறுத்தவரைக்கும் சொந்த வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் நிகழ்ச்சிகள் என பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்ய மாட்டார்கள்.

ஆனால் சிவகார்த்திகேயனை பொறுத்த வரைக்கும் அவர் வீட்டில் நடக்கும் எந்த விழாவானாலும் அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த மாதிரி சிவகார்த்திகேயன் செய்வது இமான் பிரச்சனைக்கு பிறகு தான் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இப்படி வீடியோக்களை வெளியிட்டால்தான் தன் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பாக என் மனைவி கூட நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ரசிகர்களுக்கு தெரியப்படுத்தவே சிவகார்த்திகேயன் இப்படி வீடியோவை வெளியிடுகிறார் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

Next Story