Categories: latest news

செட்டப் செல்லப்பாவாக மாறிய சிவகார்த்திகேயன்?.. பின்னாடி டோலிவுட்டே சிரிக்குது பங்கு!..

அயலான் திரைப்படம் 75 கோடி வசூல் செய்துள்ளது என போஸ்டர் வெளியிட்டதே தெலுங்கில் அந்த படத்தின் வசூல் அதிகரிக்க வேண்டும் என்கிற பக்கா பிளான் தான் காரணம் என தனுஷ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கடைசி வரை ஒரிஜினல் கேப்டன் மில்லர் வசூலை நீங்க சொல்லவே இல்லையே பங்காளி என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தனுஷ் ரசிகர்களை பொளந்து வருகின்றனர்.

தெலுங்கு படங்கள் நேரடியாக தமிழில் ஒரே நாளில் வெளியாகி கல்லா கட்டி வரும் நிலையில், மகேஷ் பாபுவின் ஓடாத குண்டூர் காரம் படத்திற்காக தில் ராஜு பண்ண பஞ்சாயத்து காரணமாக பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாக வேண்டிய கேப்டன் மில்லர் மற்றும் அயலான் உள்ளிட்ட படங்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் வெளியாகின்றன.

இதையும் படிங்க: என் புருஷன் என்னோட சின்ன பையனா இருந்தா என்ன தப்பு!.. சூப்பர் சிங்கர் பாடகி சொல்றதை கேளுங்க!..

கேப்டன் மில்லர் திரைப்படம் டோலிவுட்டில் இன்றும் அயலான் திரைப்படம் நாளையும் வெளியாகின்றன. இந்நிலையில், அதற்காக தெலுங்கிலும் ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நேற்று நடத்தியிருந்தார் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியில் தெலுங்கு ரசிகர் ஒருவர் திடீரென ஓடிவந்து பின்னாடி இருந்த பிரபல தெலுங்கு ஹீரோக்களை எல்லாம் விட்டு விட்டு சிவகார்த்திகேயனிடம் செல்ஃபி எடுக்க முயன்றார்.

அந்த ஒரே ஒரு ரசிகரை சிவகார்த்திகேயன் பாதுகாப்பு டீம் அப்புறப்படுத்த நினைக்க, அவரை விடுங்கப்பா என சிவகார்த்திகேயன் அரவணைத்து செல்ஃபி எடுத்துக் கொள்ள பின்னாடி இருந்து ரவி தேஜா மற்றும் வலிமை படத்தில் வில்லனாக நடித்த டோலிவுட் ஹீரோ கார்த்திகேயா உள்ளிட்டோர் சிரித்த காட்சிகளை பார்த்த தனுஷ் ரசிகர்கள் இதெல்லாம் செட்டப் என பச்சையா தெரியுது என சிவகார்த்திகேயனை கலாய்த்து வருகின்றனர். தமிழில் 75 கோடி வசூல் ஈட்டிய அயலான், தெலுங்கிலும் ஒரு 50 கோடி எடுத்தால் இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி படமாக மாறிடுமா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்க்கும் பிரசாந்துக்கும் முட்டிக்கிச்சா!.. கோட் படத்தில் புது சிக்கல்.. பிரபலம் சொன்ன மேட்டர்!..

 

Saranya M

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

6 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

9 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

10 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago