இது 100 கோடி, 200 கோடிய தாண்டுன விஷயம்.! கண் கலங்கிய சிவகார்த்திகேயன்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டான் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. டாக்டர், டான் என தொடர்ந்து இரண்டு 100 கோடி திரைப்படங்களை கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் பட நிறுவனமும் இணைந்து தயாரித்து இருந்தது.
இந்த படத்தின் வெற்றி விழா அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், இந்த படத்திற்கு நான் எவ்வளவு கலெக்ஷன் ஆகியுள்ளது என்பதை கேட்கவில்லை.
இதையும் படியுங்களேன் - பிரபல சேனல் அதிகாரி என்னை தனி அறைக்கு அழைத்தார்.! நடிக்கையின் அந்த 'திக்' நிமிடங்கள்...
இந்த படம் முடிந்து வெளியே வரும்போது, எல்லோரும் அவர்களது அப்பாவிற்கு போன் செய்து பேசினாலோ, அல்லது அவர்களை நினைத்து கொண்டாலே போதும். இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது என நான் எண்ணினேன். அதே போல நடந்தது என பலரும் என்னிடம் கூறினார்கள்.
இந்த விஷயம் படம் 100 கோடி 200 கோடி கலெக்சன் என்பதை தாண்டிய ஒரு விஷயம். ஆதலால் இந்த படத்திற்கு நானும், எனது உதவியாளர் கலையிடம் இந்த படத்தின் கலெக்ஷன் எவ்வளவு என்பதை கேட்கவே இல்லை. என மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் சிவகார்த்திகேயன்.