சிவகார்த்திகேயன் மேல…. விமல் கீழ.. எஸ்டிஆரோ… வேற பிரபலம் சொல்வது என்ன?

vimal sk str
நடிகர் விமல், சிவகார்த்திகேயன் இருவரும் ஒரே சமயத்தில் திரைத்துறைக்கு வந்தாலும் சிவகார்த்திகேயன் எளிதில் முன்னுக்கு வந்துவிட்டார். ஆனால் விமல் சறுக்கி விட்டார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என பிரபல சினிமா விமர்சகர் அஷ்ரப் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கூத்துப்பட்டறையில் இருந்து நடிப்புத் திறமையில் வெளிவந்தவர்கள் தான் விமல், விதார்த், விஜய்சேதுபதி. அதே போல நாளைய இயக்குனர்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் வெளிவந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மாதிரி இயக்குனர்கள். சிவகார்த்திகேயனுக்கு ஆர்டி.ராஜான்னு ஒரு கைடு இருந்தாரு. அவரு சொல்றதை வச்சித்தான் ஆரம்பத்துல படிப்படியா வளர்ந்தாரு.
அப்படி ஒரு ஆளு விமலுக்கு ஆலோசனை சொல்றதுக்கு அமையல. அதனாலதான் விமல் முன்னுக்கு வரல. இப்ப வரை ஒரு சறுக்கல். விமலும், சிவகார்த்திகேயனுக்கும் சேர்ந்து நடிச்ச படம் கேடி பில்லா கில்லாடி ரங்கா. அந்தப் படத்துல ரெண்டு பேரும் ஒண்ணா நடிச்சாலும் சிவகார்த்திகேயன் பெரிய ஆளா ஆகிடுறாரு. அதுக்கு என்ன காரணம்னா எப்பவுமே புதுசா வந்த பையனுக்குத் தான் முன்னேறணும்னு ஒரு ஊக்கம் வரும்.
அதை வச்சி அவன் படிப்படியா முன்னேறுவான். ஆனா ஏற்கனவே மேல இருக்குறவங்களுக்கு நாம தான் மேல வந்துட்டோமேன்னு ஒரு மெத்தனம் வரும். அது கூட விமலுக்கு அந்த டைம்ல இருந்துருக்கலாம்னு தோணுது. அந்த பேலன்ஸை மெயின்டைன் பண்ண முடியாத சூழல் விமலுக்கும் வந்துருக்கலாம். அந்த பாயிண்ட்ல தான் சிவகார்த்திகேயன் ஸ்கோர் பண்றாரு.
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்துலயே விமல் தான் மெய்ன் ஹீரோ. அந்த டைம்ல மார்க்கெட் விமலுக்குத்தான் இருக்கு. அப்போ புலிவால்னு ஒரு படத்துல நடிச்சாரு. அதுல கொஞ்சம் சிக்கல் இருந்தது. அந்த டைம்ல அதுக்கு முன்னால ஒண்ணு ரெண்டு படங்கள் ரிலீஸ் ஆக முடியாம சிக்கல்ல இருந்தப்ப தயாரிப்பாளருக்கு 80 லட்ச ரூபாயை விமல் தான் விட்டுக் கொடுத்தாராம். அன்னைக்கு அது மிகப்பெரிய தொகை. அந்த நேரத்துல 13 படங்கள் வரை விமல் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு அவருக்கு கரெக்டான கைடு அமையல. அதீத நம்பிக்கை என பல இடங்களில் சறுக்கி விடுகிறார். அதே நேரத்துல சிவகார்த்திகேயன் முதலில் ஆர்டி.ராஜா, அதன்பிறகு வேற ஒரு ஆள் என மாற்றி மாற்றி வேற வேற லெவலுக்குச் செல்கிறார். அங்க தான் சிவகார்த்திகேயன் இன்னைக்கு டெவலப் ஆகி நிக்கிறாரு. அவரு வேகமா சிந்திக்கிறாரு. அவரது அசுர வளர்ச்சிக்குக் காரணமே இதுதான்.
விமல் என்பவர் ஒரு நல்ல நடிகர். அவரை ஸ்டார் ரேஞ்சுக்கு வச்சிக்கலாம். சூப்பர்ஸ்டார் ரேஞ்சுன்னா அது சிவகார்த்திகேயன்தான். அந்த வகையில விமலோடு சேர்ந்து வந்தவங்க யாரும் இன்னைக்கு இன்டஸ்ட்ரில பெரிய ஆளு இல்லை. எஸ்டிஆரைத் தவிர வேற யாரும் நெகடிவிடியை ஃபேஸ் பண்ணி வர சாத்தியம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.