சந்தானத்தோட நடிச்சா நீ காலி!. சிவகார்த்திகேயனை தடுத்து காப்பாற்றிய நண்பர்.. அது மட்டும் நடக்கலனா!...

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து பல போராட்டங்களுக்கு பின் நடிகரானவர்தான் சிவகார்த்திகேயன். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான மெரினா என்கிற படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் மனம் கொத்தி பறவை, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகராக மாறினார்.
மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே சினிமாவில் முன்னேறி விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்த நடிகர் இவர். பல நடிகர்களும் இவரை பார்த்து பொறாமைப்பட்டனர். ஒரு கட்டத்தில் தனுஷுடனான உறவையும் முறித்துக்கொண்டுவிட்டார். தன்னை தேடி வருபவர்கள் மூலம் படம் நடித்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்.
இதையும் படிங்க: ‘லால் சலாம்’ படத்தில் மாஸ் காட்டும் தங்கதுரை! செகண்ட் சிங்கிளை வெளியிட்டு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா
தற்போது பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள திரைப்படம் அயலான். இந்த படம் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. சினிமாவில் போட்டி, பொறாமை என்பது எப்போதும் அதிகம். சிவகார்த்திகேயன் ஹீரோவாக பெரிய ரேஞ்சுக்கு போனதை பார்த்து சந்தானம் ‘இனிமேல் நானும் ஹீரோ’ என களம் இறங்கினார். ஏனெனில், விஜய் டிவியில் சிவகார்த்திகேயனுக்கெல்லாம் சீனியர் அவர். ஆனால், சிவகார்த்திகேயன் அளவுக்கு அவரால் வரமுடியவில்லை.

sivakarthikeyan
சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் அவரின் நண்பர்கள்தான். குறிப்பாக விஜய் டிவியில் அவர் ஆங்கராக இருந்தபோது கிடைத்த நண்பர்கள். அதில் ஒருவர்தான் ஆர்.டி.ராஜா. சினிமாவில் வாய்ப்பு தேடியபோது சந்தானம் போல ஒரு காமெடி நடிகரானால் போதும் என்றுதான் சிவகார்த்திகேயன் நினைத்தாராம். ஆனால், அவரை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டவர் ஆர்.டி.ராஜா.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் கேப்டனை ஃபாலோ பண்ணும் விஜய்… அட இப்படி மாறிட்டாரா என்ன தளபதி?!…
ஒருமுறை சந்தானம் படத்தில் அவரின் நண்பராக நடிக்கும் வாய்ப்பு கூட கிடைத்து சிவகார்த்திகேயனும் சம்மதம் சொல்லிவிட்டார். ஆனால், ‘அப்படி நடித்தால் எல்லா படங்களிலும் அதுபோன்ற வேடம் மட்டுமே உன்னை தேடி வரும். நீ ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும். நீ ஒரு ஹீரோ மெட்டீரியல்’ என சொல்லி சொல்லை அவர வளர்த்துவிட்டவர்தான் ஆர்.டி.ராஜா.
பின்னாளில் அவரின் மேனேஜராகவும் ராஜா மாறினார். அதோடு, சிவகார்த்திகேயன் நடித்த சில படங்களை இருவரும் சேர்ந்து தயாரித்தனர். ஆனால், படம் நஷ்டமடைந்து பல கோடி கடன் ஆனதால் ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் எழுந்து இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இவர் வந்தார்! ‘கேப்டன் மில்லரை’ காப்பாற்றிய ஒரு கேரக்டர்