More
Categories: Cinema News latest news

சிம்புவுக்கு உதவ வந்த சிவகார்த்திகேயன்…பாவம் பல பிரச்சனைகளை பாத்தவரு!…..

சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்த மாநாடு திரைப்படம் ஒருவழியாக கடந்த 25ம் தேதி காலை வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். முதன் முறையாக தமிழில் ஒரு டைம் லூப் திரைப்படம். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். இப்படம் சிறப்பாக இருப்பதாக சிம்பு ரசிகர்களுடம், யுடியுப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சனம் செய்யும் நபர்களும் தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

அதேநேரம் இப்படம் பல பிரச்சனைகளை தாண்டித்தான் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையை விற்கும் விஷயத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, பைனான்சியரிடம் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வாங்கிய சில கோடிகளை கொடுக்க முடியவில்லை.

எனவே, படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக சுரேஷ் காமாட்சி திடீரென 24ம் தேதி இரவு டிவிட்டரில் தெரிவித்தார். இது அட்வான்ஸ் புக்கிங் செய்து வைத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின் திரையுலகினர் பலரும் இப்படத்திற்காக பேசி இப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த வெங்கட்பிரபு மாநாடு படம் வெளியாகாது என தெரிந்தவுடனே மொத்த சினிமா உலகமும் எங்களுக்கு உதவி செய்ய வந்தது. மாநாடு படம் வெளியாக வேண்டும் என எல்லோரும் விரும்பினர். நடிகர் சிவகார்த்திகேயன் கூட என்னை செல்போனில் அதிகாலை 3 மணிக்கு அழைத்து நான் ஏதேனும் உதவி செய்யட்டுமா எனக்கேட்டார் என வெங்கட்பிரபு தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும் போதும் முதல் நாள் இரவு அவர் அல்லது அப்படத்தின் தயாரிப்பாளர் கொடுக்க வேண்டிய கடன் பிரச்சனையால் படத்திற்கு தடை வரும். அதன்பின் சில கோடிகளை அவர் சம்பளத்தில் விட்டுக்கொடுப்பார்.

அல்லது புதிதாக ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக அவர் வாக்கு கொடுப்பார். இப்படித்தான் அவரின் டாக்டர் திரைப்படமே வெளியானது. இப்படி பல பிரச்சனைகளை சந்தித்தவர் என்பதால் மாநாடு படம் பிரச்சனையை சந்திக்கிறது என்பதால் உடனே உதவ முன்வந்தார்.

பொதுவாக ஒரு நடிகருக்கு பிரச்சனை எனில் உள்ளூற சந்தோஷப்படும் நடிகர்கள்தான் அதிகம். இதில், சிவகார்த்திகேயன் விதிவிலக்கு என சிம்பு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts