கோட் படத்தில் நடிக்க இருந்தது அந்த ஹீரோதான்.. அர்ச்சனா கல்பாத்தி சொன்ன சூப்பர் சேதி

by Akhilan |   ( Updated:2024-08-31 13:27:03  )
கோட் படத்தில் நடிக்க இருந்தது அந்த ஹீரோதான்.. அர்ச்சனா கல்பாத்தி சொன்ன சூப்பர் சேதி
X

#image_title

The Goat: நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் கதையில் முதலில் நடிக்க இருந்தது கோலிவுட்டின் மற்றொரு முன்னணி நடிகர் என்பது குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: குறி வச்சாச்சு இரை ரெடியா? வேட்டையன் ரஜினிகாந்தின் முக்கிய அப்டேட்டுங்கோ!..

இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருக்கிறார்.இப்படத்தின் முதல் கட்ட பணியில் இருந்தே அர்ச்சனா கல்பாத்தி படக்குழுவுக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் விஜயின் தீவிர ரசிகையான அர்ச்சனா தங்களுடைய பேனரில் விஜயின் மிகப்பெரிய ஹிட் படம் அமைய வேண்டும் என எதிர்பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்.

கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கி இருக்கிறது. தற்போது அர்ச்சனா கல்பாத்தி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கிறது. இது குறித்த அவர் கூறும் போது, பிகில் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டை 200 கோடி தான் என இருந்த நிலையில், இப்படத்திற்கு விஜய் சாரின் சம்பளமாக 200 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய்சேதுபதி நடித்த படத்தில் முதலில் டிக் ஆனவர் அஜித்தா? இயக்குனரே சொன்ன சீக்ரெட்

இதற்கு காரணம் அவருடைய மார்கெட் உயர்வு தான். கர்நாடகா, கேரளா, ஆந்திரா, வெளிநாடு உட்பட எல்லா இடங்களிலும் அவருக்கான வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. அவரை வைத்து படம் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகியுள்ளது. அவருடைய பங்கை அவர் சரியாக செய்து விடுவார். இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளருக்கு தான் அவருக்கானதை சரியாக கொடுக்கவேண்டிய நிர்பந்தம் உருவாகும்.

sivakarthikeyan

முதலில் கல்பாத்தி எஸ் அகோரம் சிவகார்த்திகேயன் படத்தை தான் தயாரிக்க இருந்தோம். அந்த சமயத்தில் வெங்கட் பிரபுவுடன் பேசும்போது முதலில் அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதாக இருந்தது. இதைத் தொடர்ந்து தான் விஜய் சாரை தயாரிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் வெங்கட் பிரபு கூடிய ஒன்லைனை விஜய் சாரிடம் தெரிவித்திருந்தோம்.

வெங்கட் பிரபுவும் வாரிசு சூட்டினில் விஜய் சாரிடம் இந்த கதையை கூறியிருந்தார். வலுவான கதைக்கு உச்சபட்ச நடிகர் தான் வேண்டும் என்ற நிலை உருவானபோதுதான் சிவகார்த்திகேயனுக்கு முன்னால் இத்திரைப்படம் உருவாகி இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ‘ரிதம்’ படத்தில் ஜோதிகாவுக்கு பதில் நடிக்க இருந்த நடிகை! லைஃபே மாறியிருக்குமே

Next Story