Categories: Cinema News latest news

சூர்யா – ஜோதிகாவின் திருமணத்தினை தடுத்து நிறுத்தினேனா? இதுதான் நடந்தது ? மனம் திறந்த சிவக்குமார்..

தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகளில் திருமணம் செய்து பல வருடங்களை கடந்தும் பிரபலமாக இருப்பவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. திருமணம் முடிந்து பல வருடங்களை கடந்து இருவருக்கும் தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் இருந்தும் பாப்புலர் ஜோடியாக வலம் வருகின்றனர்.

ஆனால் சூர்யா மற்றும் ஜோதிகாவின் திருமணம் அவ்வளவு எளிதாகலாம் நடக்கவில்லை. பல பிரச்னைகளை சந்தித்தாகவும் சிவக்குமாரும் பெரிய எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஜோதிகா தற்கொலை முயற்சி செய்தப்பின்னரே இந்த திருமணம் நடந்தது என பல வியூகங்கள் கிளம்பியது.

இதையும் படிங்க: கொரோனா காலத்திலிருந்து இப்போதுவரை நிஜமாகவே ஓடிய படங்கள்!.. ப்ளாக்பஸ்டர் லிஸ்ட்!…

அப்படி இருக்கும் போது என் சொந்த மகன் காதல் திருமணத்தினை எப்படி தடை செய்வேன். என்னிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் சூர்யா, ஜோதிகாவிற்கு இல்லை. அவர்கள் தான் தங்கள் காதலை வீட்டில் சொல்லியும் நான்கு வருடம் காத்திருந்தனர். 

இதையும் படிங்க: ஒன்னுக்கொன்னும் சளைச்சது இல்ல! கமலின் சினிமா வாரிசு இவர்தானாம் – உயிரை கொடுத்து நடிச்சதுக்கு கிடைச்ச பலன்

அதை தொடர்ந்து தான் அவர்கள் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடனே நடைபெற்றது. இதில் யாரும் எதிர்ப்பெல்லாம் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். பல வருடமாக சினிமா துறையில் இருந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

சூர்யா தற்போது கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதைப்போல தளபதி 68 படத்தில் சமீபத்தில் ஜோதிகா ஒப்பந்தமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சூர்யாவும், ஜோதிகாவும் தற்போது அடிக்கடி மும்பைக்கு ட்ரிப் அடித்து வருவதற்கும் அவர்கள் பிள்ளைகள் அங்கு படிப்பதாலேயே மும்பை சென்று வருவதாகவும் செட்டிலாகவெல்லாம் இல்லை என்றும் சூர்யா சமீபத்தில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இதுக்கு பதில் அந்த மாறி படம் எடுத்து பொழைக்கலாம்- ப்ளூ சட்டை மாறனை பொளந்துகட்டிய இயக்குநர்

Published by
Akhilan