அமீரை ஏமாற்றிய சிவக்குமார் குடும்பம்?!.. பருத்தி வீரன் படத்தில் இவ்வளவு நடந்தததா?!..

by சிவா |   ( Updated:2023-11-08 13:03:29  )
ameer
X

இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர் அமீர். பாலா சிவக்குமாருக்கு நெருக்கம் என்பதால் அமீரும் அவர்களுக்கு நெருக்கமானார். அதனால்தான் அவர் முதலில் இயக்கிய முதல் படமான ‘மௌனம் பேசியதே’ படத்தில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்த அவரின் தங்கை ‘இந்த படத்தில்தான் சூர்யாவை ஹீரோ போல உணர்கிறேன்’ என அமீரிடம் நெகிழ்ந்து சொன்னார்.

அதேபோல், சூர்யாவின் தம்பி கார்த்தியை முதன் முதலில் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்ததும் அமீர்தான். அதுவும் பருத்தி வீரன் என்கிற கதையில் அவரை அதகளம் செய்ய வைத்திருந்தார். எந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு முதல் படம் கிடைக்குமா என்பது சந்தேகமே. கார்த்தியிடமிருந்து சிறப்பான நடிப்பை முதல் படத்திலேயே மொத்தமாக அமீர் வெளிக்கொண்டு வந்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் படத்த பாதிக்கு மேல பார்க்க முடியல!.. அவர் கூடவ நடிச்சிட்டு இப்படி சொல்லலாமா?!…

இந்த படத்தை பார்த்த ரஜினி அமீரிடம் ‘கார்த்தியிடமிருந்து எப்படி இப்படி ஒரு நடிப்பை வெளியே கொண்டு வந்தீர்கள்?’ என ஆச்சர்யத்துடன் கேட்டார். இந்த படத்தை பார்த்த கமல் அமீரை அழைத்து பேசி நம் ஒரு படத்தில் இணைவோம் என சொன்னதும் நடந்தது.

Paruthiveeran

Paruthiveeran

சிவக்குமாரின் இரண்டு மகன்களுக்கும் முக்கிய படங்களை இயக்கிய அமீர் அதன்பின் இருவரையும் வைத்து படமே எடுக்கவில்லை. அதோடு, சூர்யா, கார்த்தி என இருவரிடம் பேசுவதும் இல்லை. அவர்களின் பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை. அப்படியென்ன அவர்கள் மீது அமீருக்கு கோபம் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது.

இதையும் படிங்க: தீபாவளி தினத்தன்று திரையரங்கை தெறிக்க விட்ட கமல், ரஜினி படங்கள் – அதிக வெற்றி யாருக்கு?

பருத்துவீரனை தனது சொந்த படத்தை போட்டுத்தான் எடுத்தார் அமீர். படம் உருவானபோது சிவக்குமார் குடும்பத்தின் உறவினரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மூலம் கொஞ்சம் பண உதவியும் செய்யப்பட்டது. படம் முடிந்து படத்தை பார்த்தவர்கள் ‘இந்த படம் நல்ல வசூலை பெறும்’ என கணித்துவிட்டனர்.

எனவே, தயாரிப்பாளர் சங்கம் மூலம் அமீரிடம் பேச்சுவார்த்தை நடத்தி படத்தை அப்படியே ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு எழுதி வாங்கிவிட்டனர். அமீருக்கு அவர் செலவு செய்த ரூ.1.25 கோடியை கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். படம் வெளியாகி பல கோடிகளை வசூலித்தது. ஆனால், அமீருக்கு எந்த லாபமும் போகவில்லை.

அதோடு, அந்த 1.25 கோடியை அமீருக்கு அவர்கள் கொடுக்கவே இல்லை. இது தொடர்பாக அமீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 16 வருடங்களாக இந்த வழக்கு நடந்து கொண்டு வருகிறது. எனவே, அமீரின் கோபத்திற்கு இதுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதீப் சைக்கோ இல்லை!.. உள்ளே இருக்குற அதுங்கதான் சைக்கோ.. கடுப்பான ஜெயிலர் பட நடிகை!..

Next Story