சினிமாவில் நடிக்க குடும்பத்தை பிரித்த ஜோதிகா.. மன உளைச்சலில் சிவக்குமார்!..
தமிழ் சினிமாவில் வாலி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஜோதிகா. அதன்பின் சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். விஜயுடன் இவர் நடித்த குஷி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமாக்கியது.
அதன் சூர்யாவுடன் காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல், பேரழகன், மாயாவி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தொடர்ந்து ஜோதிகாவுடன் நடித்ததால் அவருடன் சூர்யாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், அந்த காதலை சிவக்குமார் ஏற்கவில்லை. சில வருடங்கள் போராடித்தான் அவரை சம்மதிக்க வைத்தார் சூர்யா. அப்போது சிவக்குமார் போட்ட முக்கியமான கண்டிஷனே திருமணத்திற்கு பின் ஜோதிகா நடிக்க கூடாது என்பதுதான். அப்போது அதை ஏற்றுக்கொண்டார் ஜோதிகா.
கட்டுக்கோப்புடன் தனது மகன்களை வளர்த்த சிவக்குமார் திருமணத்திற்கு பின் எல்லோரும் கூட்டுக்குடும்பமாக இருக்க வேண்டும் எனகூறி சென்னை தி.நகரில் ஒரு பெரிய வீட்டை கட்டினார். அந்த வீட்டில்தான் சூர்யா, ஜோதிகா வசித்தனர். திருமணத்திற்கு பின்னர் சில வருடங்கள் சினிமாவில் அவர் நடிக்கவில்லை. ஆனால், 36 வயதினேலே படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படம் பெண்கள் வாழ்வில் எப்படி வெற்றிபெறவேண்டும் என்பதை காட்டியதால் அதில் மட்டும் ஜோதிகாவை நடிக்க சம்மதம் சொன்னார் சிவக்குமார்.
ஆனால், அதுதான் கடைசி படமாக இருக்க வேண்டும் எனவும் சிவக்குமார் கண்டிஷன் போட்டார். திருமணத்திற்கு பின்னர் ஒரு நடிகை நடிக்க வந்துவிட்டால் தொடர்ந்து நடிக்காமல் இருக்க முடியாது. இயக்குனர்கள் நல்ல கதையுடன் அவரை தேடி வருவார்கள். எனவே, ஜோதிகா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில், சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை. ஒருபக்கம், சூரரைப்போற்று படத்திற்கு பின் சூர்யாவை ஹிந்தி படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை ஜோதிகாவுக்கு வந்தது. ஏற்கனவே ரஜினி, கமல், சித்தார்த்த், மாதவன் உள்ளிட்ட சில நடிகர்கள் பாலிவுட்டில் நடித்துள்ளனர். எனவே, சூர்யாவுக்கும் அந்த ஆசை இருக்கிறது.
கூட்டு குடும்பமாக இருந்தால் சிவக்குமார் தன்னை சினிமாவில் நடிக்கவிட மாட்டார் என கணக்குப்போட்ட ஜோதிகா தற்போது சூர்யாவை சம்மதிக்க வைத்து மும்பையில் ஒரு ஆடம்பர வீட்டை வாங்கி அங்கு அவருடன் குடியேறிவிட்டார். இதையடுத்து தான் என்ன சொன்னாலும் கேட்கும் மகன் சூர்யா இப்படி மாறிவிட்டானே என மனவருத்தத்தில் இருக்கிறாராம் சிவக்குமார்.
சினிமாவில் நடிப்பதற்காக கூட்டு குடும்பத்தை ஜோதிகா பிரிந்துவிட்டார் என திரையுலகில் பேச துவங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: இதெல்லாம் மறக்க முடியுமா?.. இதுவரை பீட் பண்ணமுடியாத 90 கிட்ஸின் பிரபலமான சீரியல் பாடல்கள்!..