சூர்யாவுக்கு சினிமா ஒன்னும் தராது...! அவனுக்கு அடையாளமே இது தான்...சிவக்குமாரின் ஆக்ரோஷமான பேச்சு...
சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகரை ஏற்றவும் தெரியும். இறக்கவும் தெரியும். அப்படி ஒரு நிலையில் பல தோல்விகளை கண்டு படிப்படியாக முன்னேறி இன்று மொத்த தமிழ் சினிமாவுமே அண்ணாந்து பார்க்க நிலையில் இருக்கிறார் நடிகர் சூர்யா.
சரியாக நடிக்க தெரியாது. நடனம் சுத்தமாக தெரியாது. இந்த இரண்டு தகுதிகளை வைத்துக் கொண்டு நம்பிக்கையில் வந்தவர் தான் சூர்யா. ஆனால் இன்று ஒட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடுகிற மனிதராக வளர்ந்து நிற்கிறார். மேலும் தேசிய விருது நாயகனாகவும் பெருமை சேர்த்திருக்கிறார்.
இதையும் படிங்கள் : தெரிஞ்ச ரூட்டை மாத்தி பல்பு வாங்கிய இயக்குனர்கள்… அஜித், விஜய், விக்ரம் எல்லாம் பாவம்.! ஆதாரம் இதோ…
இன்னொரு பெருமை ஆஸ்கார் விருது கமிட்டியில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இப்படி பட்ட நிலையில் இருக்கும் சூர்யாவை பற்றி அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார் சூர்யாவுக்கு ஏகப்பட்ட படங்கள் வரலாம். அந்த படங்களால் அவர் பல கோடிகளை சம்பாதிக்கலாம்.
இதையும் படிங்கள் : வாவ்…சலிக்காத அழகில் பிரியா பவானி சங்கர்…ரிப்பீட் மோடில் ரசிக்கும் ரசிகர்கள்…
ஆனால் அவருக்கு என்று ஒரு அடையாளம் உண்டு என்றால் அது அகரம் ஃபவுண்டேஷன் மட்டும் தான். அந்த அகரம் மூலம் தான் அவருக்கு ஒரு நிலையான பேர் கிடைத்தது என மேடையில் மிகவும் ஆக்ரோஷமாக கூறினார். அந்த ஃபவுண்டேஷன் மூலம் ஏராளமான குழந்தைகளை படித்து வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா.