80ஸ் கிட்ஸ்களின் கவர்ச்சி கன்னி!.. இளசு முதல் பெருசு வரை ஏங்க வைத்த தீபா!..

by sankaran v |   ( Updated:2023-11-18 08:28:35  )
80ஸ் கிட்ஸ்களின் கவர்ச்சி கன்னி!.. இளசு முதல் பெருசு வரை ஏங்க வைத்த தீபா!..
X

Deepa2

80களில் தமிழ் சினிமா ரசிகர்களைத் தன் வசீகர அழகாலும், நடிப்பாலும் கட்டிப்போட்ட கவர்ச்சி கன்னி தான் நடிகை தீபா. இவரது பெயரைக் கேட்டதுமே 80ஸ் குட்டீஸ்களுக்கு தெய்வீக ராகம்.... தெவிட்டாத பாடல் தான் நினைவுக்கு வரும்.

அந்தரங்கம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கல்யாண பறவைகள், நல்லதொரு குடும்பம், மாந்தோப்பு கிளியே, உல்லாசப்பறவைகள், ஜானி, முந்தானை முடிச்சு, மீண்டும் கோகிலா என்று இவர் நடித்த படங்கள் அனைத்தும் செம மாஸ் தான். இவர் கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் உன்னி மேரி.

கடவுள் சில பேருக்கு மட்டும் தான் இப்படி ஒரு வரம் கொடுக்க முடியும். அது என்னன்னா என்றும் மாறா இளமை. நடிகர்களில் சிவகுமாரை சொல்லலாம். நடிகையரில் யார் என்றால் அது தீபா. ரொம்ப நாள் ஆள் காணாமலேயே போய் விட்டாங்க. இருந்தாலும் அவரது நினைவுகளை மீட்கும்போது இப்போதும் பசுமையாகத் தான் உள்ளது. நடிகர் சிவகுமார் இவரைப் பற்றி இப்படி ஒரு பகிர்வு கொடுத்துள்ளார்.

90களின் தொடக்கம் வரை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏறக்குறைய 300 படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே இருந்தவர் தீபா. புகழின் உச்சியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டார். அவ்ளோ தான்.

Actress Deepa

RRI

சினிமாவுக்குக் குட்பை சொல்லி விட்டு கேரளா போய் செட்டில் ஆனாா். ஆனால் இன்றும் நம் நினைவுகளில் காலத்துக்கு ஸ்டே வாங்கி, இளமை மெருகு குறையாமலே வாழ்ந்து வருபவர் அதே நடிகை தீபா தான்.

வருடங்கள் எவ்வளவு தான் உருண்டோடினாலும் பேரன் ரீஹானைக் கையில் வைத்துக் கொஞ்சினாலும் தீபாவின் கொள்ளை அழகு மட்டும் மாறவே இல்லை. கணவர் பெயர் ரஜோய் ஆல்ஃபஸ். மகன் நிர்மல். மருமகள் ரஞ்சனி.

பேரன் ரீஹானுடன் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்து திரும்பினார். அவரை எளிதாக அடையாளம் காட்டியது அந்த ரோசாப்பூ முகம்.

இடையில் ஓடியது 25 வருடங்கள் என்றாலும், தோற்றத்தைப் பார்க்கும்போது ஐந்தாறு வயது மட்டுமே முதிர்ச்சி தெரிகிறது. தீபா வாங்கி வந்த வரம் அப்படி என்றே தோன்றியது.

Next Story