இமான் மேட்டர் ஐ டோண்ட் கேர்!.. சிவகார்த்திகேயன் போட்ட போட்டோஸ் பாருங்க!..

by சிவா |   ( Updated:2023-12-16 08:19:13  )
imman
X

விஜய் டிவியில் ஆங்கராக இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என பல படங்களிலும் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். குறுகிய காலகட்டத்திலேயே விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் என பல நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக முன்னேறினார்.

அவரின் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மேலும், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். இது அவரின் 21வது திரைப்படமாகும். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். ஆனால், இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டியில் சிவகார்த்திகேயனின் மொத்த இமேஜும் டேமேஜ் ஆனது.

இதையும் படிங்க: கதையையே மாற்றிய உறியடி விஜய் குமார்!.. கிரேட் எஸ்கேப் ஆன அயோத்தி பட இயக்குனர்..

தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை சிவகார்த்திகேயன் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவரின் படங்களுக்கு நான் இசையமைக்க மாட்டேன் எனவும் இமான் கூறினார். எனவே, இமானின் விவாகரத்துக்கே சிவகார்த்திகேயனே காரணம் என அரசல் புரசலாக பேசப்பட்டது.

siva

இமானின் பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் அந்த வீடியோவை நீக்கவும், இந்த விஷயம் சமூகவலைத்தளங்களில் டிரண்டிங் ஆகாமல் தடுப்பதற்காகவும் சிவகார்த்திகேயன் இணைய குழுக்கள் மூலம் பல முயற்சிகளையும் எடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இமான் விவகாரம் வேகமாக பரவி சிவகார்த்திகேயனுக்கு ஒரு கரும்புள்ளியாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: சைலைண்டா நடக்கும் வேலை!. பாகுபலி ரேஞ்சுக்கு உருவாகும் சிம்பு படம்!. சம்பவம் உறுதி..

அதேநேரம், இமான் சொன்ன புகார் குறித்து அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மேலும், சில மாதங்கள் வீட்டை விட்டே வெளியே வரமால் இருந்தார் சிவகார்த்திகேயன். எந்த பொது நிகழ்ச்சிகளிலும் அவரை பார்க்க முடியவில்லை. செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட தலைமறைவாகவே இருந்தார்.

siva

சமீபத்தில் தனது 21வது படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள துவங்கினார். இந்நிலையில்தான், திடீரென தனது மேக்கப் அறையில் கண்ணாடி முன் நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதைப்பார்த்தால் ‘இமான் மேட்டர் எனக்கு ஐ டோண்ட் கேர்’ என சிவகார்த்திகேயன் சொல்வது போலவே இருக்கிறது என பதிவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்ன ஆச்சு பாலாவுக்கு.. இப்போ தானே அவ்வளவோ உதவி செஞ்சாரு.. வைரலாகும் புகைப்படம்.!

Next Story