மாஸ்டர் விஜய்சேதுபதி மாதிரி ஆகிப்போச்சே!.. சிம்புவை தூக்கி சாப்பிட்ட எஸ்.ஜே.சூர்யா…

Published on: November 25, 2021
sj suriya
---Advertisement---

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு. முதன் முறையாக தமிழில் ஒரு டைம் லூப் திரைப்படம். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். அவருக்கும், சிம்புவுக்கும் இடையான காட்சிகள்தான் படத்தில் அதிகம்.

இப்படத்தின் முதல் காட்சி வெளியான முதலே இப்படம் சிறப்பாக இருப்பதாக சிம்பு ரசிகர்களுடம், யுடியுப், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சினிமாவை விமர்சனம் செய்யும் நபர்களும் பதிவிட்டனர்.

sj suriya

ஆனால், உண்மையில் இப்படத்தில் சிம்புவை விட எஸ்.ஜே. சூர்யா பேரை தட்டி சென்றுவிட்டது தெரியவந்துள்ளது. தியேட்டர் வாசலில் படம் எப்படி பல யுடியூப் சேனல்கள் ரசிகர்களிடம் கேட்டபோது பெரும்பாலானோர் ‘எஸ்.ஜே.சூர்யாதான் படமே.. எஸ்.ஜே. சூர்யா கலக்கி இருக்கார்… எஸ்.ஜே.சூர்யா செம மாஸ். அவருக்காகவே மாநாடு படத்த பார்க்கலாம்..’ என்றுதான் கூறினார்கள்.

suirya

மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யா வந்த பின்னரே படம் சூடு பிடிக்கிறது எனவும், அவர் வந்த பின்னரே படம் விறுவிறுவென செல்கிறது எனவும் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

sj suriya

மாஸ்டர் படம் வெளியான போது அப்படத்தில் விஜயை விட விஜய் சேதுபதிக்கான காட்சிகள் சிறப்பாக இருந்தது எனவும், விஜய் சேதுபதி கலக்கி இருந்தார் எனவும் பலரும் கூறினார்கள். விஜய் அவர் தூக்கி சாப்பிட்டுவிட்டதாகவும் கூறினார்கள். படம் பார்த்த பின் விஜயும் அதை புரிந்து கொண்டார்.

தற்போது மாநாடு படத்திலும் இதுதான் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment