ஹோட்டலில் நடந்த தரமான சீன்! குழந்தைனு நினைச்சா? அத விட மோசம் - பல்பு வாங்கிய எஸ்.ஜே.சூர்யா

by Rohini |   ( Updated:2023-07-04 02:42:31  )
surya
X

surya

தமிழ் சினிமாவில் இப்போது மாபெரும் நடிகர்களாக இருக்கும் விஜய் அஜித் ஆகியவர்களை வைத்து தன் அறிமுக படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா. யாரும் எதிர்பார்க்காத அளவில் விஜய் அஜித் ஆகியவர்களுக்கு ஒரு மாபெரும் ஹிட்டை கொடுத்த படம் தான் குஷி மற்றும் வாலி. அவர்களின் சினிமா வாழ்க்கையிலும் இந்த இரு படங்கள் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களாகவே அமைந்தன. அந்த பெருமையை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா.

நடிகராக வேண்டும் என்று எண்ணி தான் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் காலம் அவரை இயக்குனராக மாற்றி அழகு பார்த்தது. அவர் எடுத்த இரண்டு படங்களுமே இன்று வரை அவருக்கு ஒரு நல்ல புகழை தேடி தந்திருக்கிறது. அதன் பிறகு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் அவர் நடிகரானார்.

surya1

surya1

இதையும் படிங்க : ரஜினிக்கு ரெட் கார்டு.. வேட்டிய மடிச்சி கட்டி இறங்கிய தயாரிப்பாளர்.. செம தில்லுதான்!…

ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் ஆரம்பத்தில் அந்தப் படங்கள் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை கொண்டதாக இருந்ததனால் மக்கள் இவரை சரியாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். அதன் பிறகு தன்னுடைய டிராக்கையே மாற்றினார் எஸ் ஜே சூர்யா. வில்லனாக புது அவதாரம் எடுத்தார். அதுதான் இப்போது அவரை புகழின் உச்சிக்கே கொண்டு போய் சேர்த்து இருக்கின்றது.

இருந்தாலும் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருடைய ஒரு சுவாரசியமான சீக்ரெட் ஒன்றை பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. அவருக்கு கிரிக்கெட் பற்றி எந்த ஒரு அறிவும் இல்லையாம். அதை பற்றி எதுவுமே தெரியாதம். இதனால் ஹோட்டலில் பல்பு வாங்கிய சம்பவம் ஒன்று இருக்கின்றது என்று அதை பகிர்ந்தார். ஹைதராபாத் படப்பிடிப்பிற்காக சென்றபோது ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தாராம்.

இதையும் படிங்க : விஜய் அஜித் மாதிரி ஆக நினைச்சேன்… தலையில் தட்டி அனுப்பிட்டாங்க!.. நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்த கொடுமை…

அப்போது அந்த ஹோட்டலில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன் தங்கி இருந்தாராம். எஸ் ஜே சூர்யாவை பார்த்ததும் நடராஜன் வணக்கம் சொல்லிவிட்டு அவருடன் சேர்ந்து ஒரு போட்டோவையும் எடுத்துக் கொண்டாராம். ஆனால் எஸ் ஜே சூர்யாவிற்கு அது கிரிக்கெட் வீரர் நடராஜன் என தெரியாதாம். தன்னுடைய ரசிகர் என்று நினைத்துக் கொண்டாராம்.

surya2

surya2

அதன் பிறகு எஸ்.ஜே சூர்யாவின் உதவியாளர் "சார் நாங்களும் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா" என கேட்டார்களாம். அதற்கு எஸ் ஜே சூர்யா "கூடவே தானே இருக்கீங்க, அப்புறம் எதுக்கு போட்டோ" என கேட்டாராம். உடனே அந்த உதவியாளர்கள்" சார் உங்களுடன் இல்லை. அவருடன்" என நடராஜனை காட்டி இருக்கிறார்கள். அதன் பிறகு தான் தெரிந்ததாம் அவர் கிரிக்கெட் வீரர் நடராஜன் என்று.

இதையும் படிங்க : என்னது.. நடிகை ஸ்வர்ணமால்யா பற்றிய கிசு..கிசு.. பேச்சு… உண்மையா?

உடனே எஸ் ஜே சூர்யா நடராஜனிடம் சென்று மன்னிப்பு கேட்டு உங்களுடன் நான் ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என்று நடராஜனுடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா ஒரு போட்டோ எடுத்துக் கொண்டாராம். இதை ஒரு பேட்டியில் எஸ்ஜே சூர்யாவே கூறியிருக்கிறார்.

Next Story