கோடி கோடியா கொடுத்து ஏன் கஷ்டப்படுறீங்க? சம்பளத்தில் இப்படி ஒரு ஆஃபரா? தனிக்காட்டு ராஜாவா ஜேக்கி

Published on: September 26, 2023
surya
---Advertisement---

SJ Surya Salary: தமிழ் சினிமாவில் மட்டும்தான் கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்களைப் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டு வருகிறோம். ரஜினி, கமல் மாதிரியே கேரளாவில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் மம்மூட்டி , மோகன்லால் இவர்களெல்லாம் இன்னும் அந்தளவுக்கு சம்பளத்தை எட்டவில்லை என்பதுதான் உண்மை.

அதாவது தமிழில் 100 கோடி, 200 கோடி வரை சம்பளம் தரப்படுகிறது. ஆனால் கேரளாவில் இப்போதுதான் கோடியையே தொட்டிருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதனாலேயே தமிழில் படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கிச்சானாலே இளிச்சவாயன் தானோ!… விஷால் நல்லது சொன்னாலும் கிழிச்சு தொங்கவிட்டா எப்புடி… என்னப்பா ஆச்சி?

அந்த வகையில் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு என எஸ்.ஜே. சூர்யா தனது சம்பளத்தில் ஒரு வரைமுறையே வைத்திருக்கிறாராம். சமீப கால படங்களில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகத்தான்  மிரட்டி வருகிறார். அதையும் தாண்டி யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடிக்கும் படங்கள் 100 கோடி வரை பட்ஜெட்டில் உருவாகும் படம் என்றால் அவருடைய சம்பளம் 8 கோடியாம். இதே 50 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படம் என்றால் அவருடைய சம்பளம் 5 கோடியாம். ஆனால் அவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்யும் படம் என்றால் வெறும் 3கோடியாம்.

இதையும் படிங்க: குடும்பத்திற்காக வாழ்க்கையையே தொலைத்த செளக்கார் ஜானகி… சூல்நிலை கைதியாக மாறியதற்கு பின் இவ்வளவு காரணங்களா!…

இப்படி ஒரு ஆஃபரை கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கிறார். மிகவும் மலிவான வில்லனாக இருப்பார் போலயே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால் இதே சூர்யாவையோ விஜய் சேதுபதியையோ வைத்து வில்லனாக நடிக்க வைத்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை பற்றியும் யோசிக்க வேண்டும்.

அவர்களை விட எஸ்.ஜே.சூர்யா மிகவும் திறமைசாலியான நடிகர். ஆகவே இப்படியாவது பல படங்களின் வாய்ப்புகளை பிடித்துவிடுவோம் என்ற காரணத்திற்காகக் கூட சம்பளத்தில் இப்படி ஒரு வரையறையை வைத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.

இதையும் படிங்க: அனிருத் இல்லைனா படம் ஓடாதா? பேன் இந்திய அளவில் இசையமைப்பாளரை இறக்கிய சிம்பு – இப்பவே படம் ஹிட்தான்