மரத்துல பிணமா தொங்குவேன்… அந்த படத்துக்காக ஓனரையே மிரட்டிய எஸ்.ஜே.சூர்யா…
வாலி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித் கொடுத்த அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா, மிரட்டலான அறிமுகம் கொடுத்தார். ஆனால், அந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்குக்கே கஷ்டப்பட்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஆசை மற்றும் உல்லாசம் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.ஜே.சூர்யாவின் திறமையைக் கண்டு வியந்த அஜித், அவரை அழைத்துப் பேசியிருக்கிறார். ஒரு நல்ல ஸ்கிரிப்ட் தயார் பண்ணிட்டு வாங்க. ஒரு படம் பண்ணலாம் என்று அஜித் சொல்லவே உற்சாகமான எஸ்.ஜே.சூர்யா 60 நாட்களில் வாலி திரைக்கதையைத் தயார் செய்திருக்கிறார்.
இதையும் படிங்க: கொஞ்சம் கூடியிருச்சு! அதுக்கு இப்படியா? ஜோதிகாவின் அடுத்த கட்ட ஃபிட்னஸ்
கதை பிடித்துப் போகவே நண்பர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மூலம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வாய்ப்புக் கொடுக்கிறார். இப்படித்தான் வாலி படம் தொடங்கியது. ஆரம்பத்தில் கீர்த்தி ரெட்டிதான் ஹீரோயினாக அறிவிக்கப்பட்டு படம் டிசம்பர் 1997-ல் தொடங்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் அவருக்குப் பதில் சிம்ரன் நடிகையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதேபோல், மீனா, ரோஜா ஆகியோரும் நடிப்பதாக இருந்து கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அஜித், தனது சினிமா பயணத்தில் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் இதுதான். ஆரம்பத்தில் அஜித்தின் இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், படம் ரிலீஸாகி அடைந்த பெரும் வெற்றி அந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கியது.
இதையும் படிங்க: 2027 -ல் மறுபடியும் விவாகரத்து? நாக சைதன்யா வாழ்க்கையில் விளையாடிய ஜோதிடர்
முதல்நாளே ஷூட்டிங் கேன்சலானா செண்டிமெண்டா படத்தையே நிறுத்திடுவாங்க’ என எஸ்.ஜே.சூர்யா எவ்வளவோ சொல்லியும் வீட்டு உரிமையாளர் மசியவில்லையாம். பின்னர், 'ஓகே சார். நீங்க வீடு தர வேணாம். நாளை காலையில் நீங்க தூங்கி எழுந்ததும் ஜன்னல் வழியே பாருங்க. வெளில இருக்கிற அந்த மரத்துல நான் பிணமா தொங்குவேன்’ என்று சொல்லி வீட்டு உரிமையாளரை சம்மதிக்க வைத்தாராம் எஸ்.ஜே.சூர்யா.