விக்ரம் வேறலெவல் வெறித்தனம்!. வீர தீர சூரன்ல என்ன ஸ்பெஷல்?.. எஸ்.ஜே.சூர்யா சொல்றத கேளுங்க!...

veera theera sooran
வீரதீர சூரன் படத்துல சீயான் விக்ரமுடன் இணைந்து வில்லனாக கலக்கி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படம் தரமான ஆக்ஷன் சம்பவமாக வந்துள்ளது. விக்ரமுக்கு ஒரு கம்பேக் என்றே சொல்லலாம். படத்தில் தனது அனுபவங்கள் குறித்து படத்தின் டிரெய்லர் லாஞ்ச் விழாவில் எஸ்.ஜே.சூர்யா என்ன சொல்றாருன்னு பாருங்க...
வீரதீர சூரன் அருமையான படம். இது ஒரு வித்தியாசமான கான்செப்ட். ஜிவி.பிரகாஷ் சார் சொன்ன மாதிரி அசுரன், பிதாமகன், சேது படங்களுக்கும் பயங்கரமான ரெஸ்பான்ஸ் இருக்கும். ஜாலியா சிரிக்க வைக்கிற படங்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும். அந்த இமாதிரி இந்தப் படம் டிபிக்கல் அருண்குமார் சாரோட ஒரு படம். ஒரு ஆங்கில தரத்தில் ஒரு படமாக இருக்கும் என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இந்தப் படத்தில் நடித்ததற்காக ரொம்ப என்ஜாய் பண்ணினாராம். 'நான் எப்பவுமே இயக்குனர்கள்கிட்ட என்னை ஒப்படைச்சிடுவேன். அவர் என்னை வித்தியாசமான எஸ்ஜே.சூர்யாவாக இதுல காட்டி இருக்கிறார். கதையின் நாயகன், எதிர் நாயகன். ஆனால் நாயகன் அது லைஃப்ல மிஸ் ஆகக்கூடாது என்று கலகலப்பூட்டினார் எஸ்.ஜே.சூர்யா.

veera theera sooran
மார்ச் 27ல் இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. இந்தப் பம் ஒரு தரமான சம்பவம். வித்தியாசமான படம். படத்துக்கு எல்லாரும் உழைப்பாங்க. இந்தப் படத்துக்கு எல்லாருமே டைரக்டருக்கு என்ன வேணும்னு சொல்லி போகஸா ஒர்க் பண்ணிருக்காங்க என்கிறார் எஸ்.ஜே.சூர்யா. படத்துல டைரக்டருக்கு என்ன தேவையோ அதைப் பண்ணிக் கொடுக்கக்கூடிய சிறந்த தயாரிப்பாளர் சிபு சார். அவர் சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவாரு.
மதுரையில் 15 நாள் மழை. அதுலயும் யூனிட்லாம் நிறைய வேஸ்ட் ஆகுது. இருந்தாலும் படத்தை நல்லபடியா முடிச்சிட்டு வாங்கன்னு அனுப்பி வைச்சாரு என்றும் எஸ்.ஜே.சூர்யா சொல்கிறார். நடிப்பு என்பது ஒரு விஷயம். ஸ்டார் என்பது ஒரு விஷயம். ஆக்டிங்கையும், ஸ்டார்டமையும் லிங்க் போட்டு இழுத்து கையில வச்சிருக்குற மிகச்சிறந்த நபர்தான் விக்ரம் என்றும் எஸ்.ஜே.சூர்யா சொல்லி அசத்தினார்.
அதுமட்டும் அல்லாமல் விக்ரம்... விக்ரம்... பாடலைப் பாடி மேடையில் ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடைசியாக வீரதீர சூரன் வெற்றிவாகை சூடும் என்று முடித்தார். அதே போல டப்பிங் பேசியதும் விக்ரம் அசந்து போய் 'என்னங்க இவ்ளோ சூப்பரா பண்ணிருக்கீங்க?'ன்னும் எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டினாராம்.