விஜய்க்கு வில்லனா நடிச்சாச்சு! அடுத்து யாரு? அவர்தான் - சூப்பரான அப்டேட்டை கொடுத்த நடிப்பு அரக்கன்

Ajith AK 63: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் விடாமுயற்சி. இந்தப் படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் அஜர்பைஜானிலேயே நடத்தப்போவதாக படக்குழு முடிவெடுத்திருக்கிறார்கள். பக்கா ஆக்‌ஷன் படமாக ஹாலிவுட் தரத்தில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்தப் படத்தில் இணைகிறார் அஜித்.

இதையும் படிங்க: ஒன் சைடு காட்டினாலும் செம ஒர்த்து!. வேறலெவலில் இறங்கி விளையாடும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா அஜித்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படம் மார்க் ஆண்டனி.

இந்தப் படத்தை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஜிகர்தண்டா 2 படத்தில் லாரன்ஸுடன் நடித்திருக்கிறார், அந்தப் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகத்தான் நடித்திருக்கிறார். அவர் நடிக்கும் படங்களில் அவர் வில்லனாக தெரியாமல் மற்றுமொரு ஹீரோவாகத்தான் ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

இதையும் படிங்க: நீங்க கதறுங்க.. ஒரு வார பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் இவ்வளவா..! அடங்கிய நெகட்டிவ் விமர்சனங்கள்..!

அந்தளவுக்கு ஹீரோவுக்கு இணையான க்ரேஸ் உள்ள நடிகராக எஸ்.ஜே.சூர்யா திகழ்கிறார். ஏற்கனவே மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பார். அடுத்ததாக அஜித்துக்கும் பவனுக்கும் வில்லனாக நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அஜித்தின் அடுத்தப் படத்தினை இயக்குவதே ஆதிக்தான்.எஸ்.ஜே.சூர்யா ஆசையை நிறைவேற்றாமல் போய்விடுவாரா என்ன? மார்க் ஆண்டனி படத்தில் இருந்தே ஆதிக்கிற்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே ஒரு நல்ல பாண்டிங் இருந்தது.

இதையும் படிங்க: சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…

இந்த ஒரு பேட்டி போதாதா? அஜித்துக்கு கூடிய சீக்கிரம் வில்லனாக அவதாரம் எடுப்பார் எஸ்.ஜே.சூர்யா என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

 

Related Articles

Next Story