நடிப்புக்கு ஃபுல் ஸ்டாப்??.. மீண்டும் இயக்குனராக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா… செம மேட்டரா இருக்கே!!
அஜித்குமார் நடித்த “வாலி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. தனது முதல் திரைப்படமே பெரும் வெற்றியடைந்த நிலையில், அத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து “குஷி” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் மாபெரும் ஹிட் திரைப்படமாக அமைந்தது.
அதன் பின் “நியூ”, “அன்பே ஆருயிரே” போன்ற திரைப்படங்களை இயக்கி நடித்தார் எஸ்.ஜே.சூர்யா. இதனை தொடர்ந்து “கள்வனின் காதலி”, “வியாபாரி”, “நியூட்டனின் மூன்றாம் விதி” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, தனக்கே உரித்தான வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார்.
இத்திரைப்படங்களை தொடர்ந்து “இசை” திரைப்படத்தை இயக்கி நடித்தார். மேலும் அத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதன் பின்தான் அவரது நடிப்பின் இரண்டாவது வெர்சன் தொடங்கியது.
“ஸ்பைடர்” திரைப்படத்தில் சைக்கோ கதாப்பாத்திரத்தில் வெளுத்து வாங்கிய எஸ்.ஜே.சூர்யா, தனது வெறித்தனமான நடிப்பால் ரசிகர்களை அசரவைத்தார். அதன் பின் “மெர்சல்”, “மாநாடு”, “நெஞ்சம் மறப்பதில்லை”, “டான்” என பல படங்களில் தனது மெரட்டாலான நடிப்பில் ரசிகர்களை “ஓ” போட வைத்தார். இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது மீண்டும் இயக்குனராக களமிறங்க உள்ளாராம்.
அதாவது, எஸ்.ஜே.சூர்யா ஒரு பேன் இந்தியா திரைப்படத்தை இயக்க உள்ளாராம். இத்திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரித்து இயக்க உள்ளாராம். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திரைப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
மேலும் இத்திரைப்படத்திற்கு “கில்லர்” என பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல், இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படம் என்பதால் பல மாநிலங்களைச் சேர்ந்த நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வருகின்றன.