SK 25: இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் சுதா கொங்கரா. இவர் மணிரத்னத்திடம் சினிமா கற்றவர். சூர்யாவை வைத்து சூரரைப்போற்று எனும் படத்தை கொடுத்தவர். அந்த படத்தை பார்க்கும்போது சுதா கொங்கரா எப்படிப்பட்ட ஒரு பக்குவமான, சிறந்த இயக்குனர் என்பது தெரியவரும்.
ஓடிடியில் வெளியானாலும் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு என்கிற படத்தை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியானது. இது 1965ம் வருடத்தில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை.

ஆனால், ஹிந்தியில் கர்ணா என்கிற படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டிருந்ததால் இந்தி எதிர்ப்பு தொடர்புடைய படத்தில் நடித்தால் ஹிந்தி படத்திற்கு பிரச்சனை வரும் என நினைத்த சூர்யா சுதா கொங்கராவிடம் கதையை மாற்ற சொன்னார். ஆனால், சுதா மறுக்கவே அப்படத்திலிருந்து சூர்யா வெளியேறினார்.
அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா அப்படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளியானது. இது சிவகார்த்திகேயனின் 25வது படம் எனவும் சொல்லப்பட்டது. அதேபோல், இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்தது. வில்லனாக நடிக்க அவருக்கு 16 கோடி சம்பளம் எனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், சுதா கொங்கராவுகும், சிவகர்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை, வேறு ஹீரோவை தேடி வருகிறார்கள் என்றெல்லாம் இன்று காலை செய்திகள் உலா வந்தது. ஆனால், அதில் உண்மை இல்லை என்பது இப்போது தெரியவந்தது. எஸ்.கே. 25 படத்தின் ஃபிரி புரடெக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும், புரமோ மற்றும் டெஸ்ட் ஷூட் விரைவில் நடக்கவிருப்பதாகவும விரைவில் கிளிம்ப்ஸ் வீடியோவுடன் படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் அதர்வாவும், தெலுங்கு நடிகை ஸ்ரீலேகாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்கள். டான் சிபி சக்ரவர்த்தி படத்தில் நடித்தாலும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இதனாலதான் நேரில் வரல!.. தப்பா எடுத்துக்காதீங்க.. திடீரென்று விளக்கம் கொடுத்த நடிகர் விஜய்!..
