Cinema History
திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் மங்கிப்போன நடிகர்கள் – ஒரு பார்வை
தமிழ்ப்பட உலகில் ஜொலிப்பதற்கு வெறும் திறமை மட்டும் இருந்தால் போதாது. அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும். பல நடிகர்கள் திறமை இருந்தும் இன்னும் ஜொலிக்க முடியாமல் தவிக்கிறார்கள். திறமை இருந்தும் என்பது ஏன்னா அவர்கள் நடித்த ஒரு சில படங்கள் டாப்பாக இருக்கும். ஆனால் இவர்கள் நடித்த ஒரு சில படங்களைப் பார்த்தால் அடேங்கப்பா… எப்பேர்ப்பட்ட நடிப்பு என்று சொல்லத் தோன்றும். அவ்ளோ சூப்பரான படங்களாக இருக்கும். ஆனால் அதன்பிறகு வரும் படங்களைப் பார்த்தால் பெரிதாக ஒன்றுமே இருக்காது. மற்ற படங்கள் வந்ததும் தெரியாது. போனதும் தெரியாது. அப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தாலும் அவர்களில் ஒரு சில நடிகர்களைப் பார்ப்போம்…
இதையும் படிங்க… சிவாஜியை பார்க்க ரயிலில் அலைமோதிய கூட்டம்… அருமையான பாடல் காட்சி படமானதன் சுவாரஸ்ய பின்னணி…!
ரவி கிருஷ்ணா
இவர் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்துள்ளார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அந்த ஒரு படத்தைத் தவிர இவரது படங்கள் சோபிக்கவில்லை. இயக்குனர் செல்வராகவன் இயக்கியதால் ரவி கிருஷ்ணாவின் முதல் படத்துக்கே நல்ல மவுசு. தொடர்ந்து அவரது படங்கள் தோல்வி அடைய காரணம் நல்ல கதைகள் அமையாததுதான். இவர் ஆரண்ய காண்டம், காதல்னா சும்மா இல்லை, நேற்று இன்று நாளை, கேடி, சுக்ரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ராஜீவ்கிருஷ்ணா
ஆஹா என்ற படத்தில் நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் ராஜீவ் கிருஷ்ணா. ஆனால் அதற்குப் பிறகு அவர் மனம் விரும்புதே உன்னை, தேவராகம், நியூட்டனின் மூன்றாம் விதி, அசல் ஆகிய படங்களில் நடித்தாலும் சொல்லும்படி எதுவும் இல்லை. அதற்குக் காரணம் அதிர்ஷ்டம் தான். அது இருந்தால் அவருக்கும் நல்ல கதைகள் தேடி வரும் அல்லவா…
விக்ரம் பிரபு
கும்கி, அரிமா நம்பி , வெள்ளைக்கார துரை என ஒரு சில படங்கள் தான் விக்ரம்பிரபுவுக்கு மாஸ் ஹிட் படங்கள். டாணாக்காரன் போன்ற படங்களில் அவர் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். இன்னும் பல படங்களில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தாலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. உதாரணமாக, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, , சத்ரியன், துப்பாக்கி முனை, இறுகப்பற்று, ரெய்டு போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் அவை எல்லாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதற்குக் காரணம் அதிர்ஷ்டம் தான்.