நிக்‌ஷனுக்கு செக் வச்ச பிக்பாஸ்! போர்க்கொடி தூக்கும் சின்ன பிக்பாஸ் டீம்- மாட்னாரு தடவல் மன்னன்

Nixen at BiggBoss: சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஹாட் டாப்பிக்காக போய்க் கொண்டிருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்வுகளை பற்றித்தான். இன்று என்ன நடக்கும்? நாளை என்ன நடக்கும் என்ற ஒரு பரபரப்பை நாளுக்கு நாள் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இதற்கு முந்தைய சீசன்கள் வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் மிகவும் ஜெண்டிலாக மனிதாபிமானமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளருமே விடும் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை. டிஆர்பிக்காக அதன் சம்பந்தப்பட்ட நிறுவனமும் அவர்களை அடக்க மறுக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இதையும் படிங்க: இமான் பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியே தலை காட்டிய சிவகார்த்திகேயன்.. செம போட்டோ!

ஜோவிகா முதல் விசித்ரா வரை நண்டு சுண்டுகள் எல்லாம் பேசுற பேச்சா இது என்ற எண்ணத்தைத்தான் ரசிகர்கள் மனதில் தோன்ற வைக்கிறது. இதில் ஆரம்பித்தில் ஒரு டஃப் போட்டியாளராக காணப்பட்ட நிக்‌ஷன் சமீபகாலமாக ஐஸுவுக்கு சொம்பு தூக்கிக் கொண்டுதான் இருக்கிறார்.

தூக்கத்தில் எழுப்பி என்ன வேண்டும் என்று கேட்டால் கூட ஐஸுதான் வேண்டும் என்று சொல்லுவார் போல. அந்தளவுக்கு ஐஸூவுடன் பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டுதான் திரிகிறார். இதை தட்டிக் கேட்க உள்ளே யாரும் இல்லை போல.

இதையும் படிங்க: கமல் ட்ரீட் மட்டும்தான் இனிக்குமா? என்னோட ட்ரீட்டையும் பாருங்க – ரஜினி பிறந்த நாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ஆனால் அதை பற்றி அர்ச்சனா அவ்வப்போது நிக்ஷனுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். நேற்று நடந்த எபிசோடில் கூட சமையலறையில் அத்தனை பேரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க நிக்‌ஷன் ஐஸுவின் வேட்டியை சரி செய்வதிலேயே குறியாக இருந்தார்.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் பெரிய பஞ்சாயத்து ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை பற்றி அவர்களுக்கே தெரியாமல் ஒரு கமெண்டை பாஸ் செய்திருப்பார்கள். அதை பிக்பாஸ், திரையில் போட சம்பந்தப்பட்ட போட்டியாளர் ஏன் அப்படி சொன்னேன் என்பதை கூற வேண்டும்.

இதையும் படிங்க: என் பொண்ணு அப்படி பேசல!.. வக்காளத்து வாங்கிய வனிதா.. அம்மாவையே மிஞ்சிட்டாங்களா ஜோவிகா?..

இதில் நிக்‌ஷன் வினுஷாவை பற்றி ‘வினுஷா ஒரு வேலைக்காரி. Not my type. ஒரு ஒருத்தங்களுக்கு ஒன்னு attract ஆகனும்ல. எனக்கு வந்து உடம்பு perfect ஆ இருக்கனும். இதுக்கேத்த இது. அதுக்கேத்த அதுனு இருக்கனும். ஆனால் வினுஷாவுக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. கண் அழகா இருக்கு. டிரஸ் போட்டா perfect ஆ இருக்கு. அது ஓகே. பூர்ணிமாக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரிதான் இருக்கனும் perfect ஆ.’ என்ற கமெண்டை ஐஸுவுடன் ஒரு சமயம் பேசியிருக்கிறார்.

இந்த கமெண்டை திரையில் பிக்பாஸ் போட்டதும் ‘நான் தான் சொன்னேன். ஆனால் எதற்காக சொன்னேன் என்று இப்போ சொல்கிறேன்’ என நிக்‌ஷன் முன்னாடி வந்து நிற்க சின்ன பிக்பாஸ் வீட்டாளர்கள் மொத்தமாக இதை பற்றி நாங்கள் கண்டிப்பாக கேட்போம் என போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். என்ன நடக்கும் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம். கமல் சார் இதையும் நோட்டீஸ் பண்ணுங்க சார்.

 

Related Articles

Next Story