ஊர்வசியுடன் நடிக்க பயந்த ரஜினி?... ஓஹோ இதுதான் காரணமா?
1980களில் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஊர்வசி. இவர் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் பாக்யராஜ்ஜின் “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தென்னிந்தியாவின் டாப் நடிகைகள் பலருடன் நடித்துள்ளார் ஊர்வசி. தற்போது தென்னிந்திய சினிமாவின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார்.
ஊர்வசி, ரஜினிகாந்த்துடன் நடித்ததில்லை என்று பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஒன்றில் ஊர்வசி நடித்திருக்கிறார். அதாவது 1986 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “ஜீவனப் போராட்டம்” என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபன் பாபு, விஜயசாந்தி, ராதிகா ஆகியோருடன் ஊர்வசியும் நடித்துள்ளார். ஆனால் அவர் அதில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. எனினும் ரஜினிகாந்த் படத்தில் ஊர்வசி ஜோடியாக நடிக்கவில்லை என்பது உண்மையே.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் ஊர்வசி குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“ஊர்வசி ஒரு அசாத்தியமான நடிகை. அவரது நடிப்புக்கு இணையாக நம்மால் நடிக்க முடியாது என்ற பயம் அவருடன் நடிக்கும் நடிகருக்கு உண்டு. ஆற்றல் இல்லாத நடிகர் ஒருவர் தான் ஊர்வசியுடன் நடித்தால் நமது நடிப்பு பலம் இறங்கிவிடுமோ? என்று பயம் இருந்ததற்கு வாய்ப்பு உண்டு” என கூறியிருக்கிறார். இதனை கொண்டு பார்க்கும்போது அக்காலகட்டத்தில் ஊர்வசியுடன் நடிப்பதற்கு சில ஹீரோக்களே பயந்திருக்கின்றனர் என்பது தெரியவருகிறது.
இதையும் படிங்க:மணிரத்னம் என்னை கடித்து குதறிவிட்டார்!.. புலம்பும் தயாரிப்பாளர்.. இப்படி நடு ரோட்டுல நிற்க வச்சிட்டாரே!!