ரஜினியுடன் நடித்து கமலுடன் நடிக்காமல் போன நடிகைகள்!.. அட இத்தனை பேரா?!..
எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு பின் திரையலகில் ரஜினியும், கமலும் போட்டி நடிகர்களாக மாறியவர்கள்,. இப்போதுவரை இந்த போட்டி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ரஜினிக்கு படங்களுக்கு போட்டியாக கமல் படங்கள் வெளியாகும். சில சமயம் ரஜினி படம் அதிக வசூலை பெறும். சில சமயம் கமல் படம் அதிக வசூலை பெறும். இருவருக்குமான போட்டி என்பது பல வருடங்களாய் திரையுலகில் இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பே கமலை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினி உயர்ந்துவிட்டார். ரஜினி 100 கோடியை தொடும்போது கமல் அதில் பாதி கூட பெறவில்லை. ஆனால், விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்து ரஜினிக்கு போட்டி நான்தான் என மீண்டும் கமல்ஹாசன் நிரூபித்துவிட்டார். விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதனால் அவரின் சம்பளமும் பல கோடி உயர்ந்துள்ளது.
பொதுவாக கமலுடன் நடிக்க சில நடிகைகள் தயங்குவார்கள். ஏனெனில், அவர் திடீரென கட்டியணைத்து உதட்டில் முத்தம் கொடுத்துவிடுவார் என பயப்படுவார்கள். அதனலாலேயே பல திரைப்படங்களில் நடித்த சில நடிகைகள் கமலுடன் மட்டும் கடைசிவரை நடிக்கவே இல்லை. அப்படி ரஜினியுடன் நடித்துவிட்டு கமலுடன் நடிக்காமல் போன சில நடிகைகள் உள்ளனர். பூர்ணிமா பாக்கியராஜ், கனகா, ரோஜா, நயன்தாரா, நக்மா, ஐஸ்வர்யா ராய், நதியா, அனுஷ்கா ஆகிய நடிகைகள் ரஜினியுடன் நடித்தனர். ஆனால் கமலுடன் நடிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.