சூட்டிங் ஸ்பாட்ல கமலைத் திட்டிய நடிகை... ஆனா ரஜினிக்கு மட்டும் கட்டிப்பிடி வைத்தியம்...!
பழைய நடிகைகளில் சுமித்ரா நல்ல ஒரு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடியவர். நிழல் நிஜமாகிறது, மோகம் முப்பது வருஷம் ஆகிய படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சுமித்ரா. அதே போல ரஜினியுடன் இணைந்து புவனா ஒரு கேள்விக்குறி, ஜஸ்டிஸ் கோபிநாத், ரகுபதி ராகவன் ராஜாராம், இறைவன் கொடுத்த வரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் அளித்த சுவாரசியமான தகவல்கள் தான் இது.
ஏற்கனவே ஜோடியா நடிச்ச ஹீரோவுக்கு அம்மா ரோல் பண்ணியிருக்கீங்களான்னு நிருபர் கேட்க சுமித்ரா அதற்கு இப்படி பதில் சொல்கிறார்.
சிங்காரவேலன் படத்துல செட்டுக்கு வந்ததும் 'சுமி சுமி'ன்னு கூப்பிடுற ஆளு அப்புறம் 'மம்மி மம்மி'ன்னு கூப்பிட ஆரம்பிச்சாரு. 'ஏ உதை கிடைக்கும் பார்த்துக்க'ன்னு கமலைத் திட்டினாராம் நடிகை சுமித்ரா. பணக்காரன் படத்துல கிளைமாக்ஸ் காட்சி. 25 வருஷம் கழிச்சி நான் ரஜினி சாரை பிள்ளையா பார்க்கறேன். அப்போ 'அம்மா...'ன்னு அழுதுட்டு ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சிக்கணும். பாதி வருவாரு. அப்புறம் நின்னுடுவாரு. சிரிப்பு வந்துடும். 'சாரி சார். எனக்கு அவங்களை மம்மின்னு கூப்பிட முடியல'ன்னு தலையில கையை வைப்பார் ரஜினி.
'ரஜினி வெயில் போகுது... சீக்கிரம் பண்ணுங்கன்னு டைரக்டர் சொல்வாரு. அப்போ கொஞ்சம் ஆங்கிள் மாத்துட்டா'ன்னு கேட்பாரு. 'அதுக்கு சரி'ன்னு சொன்ன ரஜினி 'அம்மா...'ன்னு ஓடி வந்து கட்டிப்பிடிச்சாரு. அப்பவும் பின்னாடி தோள்கிட்ட முகத்தை வச்சிக்கிட்டு சிரிப்பாரு. அதை எல்லாம் லைப்ல மறக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் 1975ல் அவளும் பெண் தானே என்ற தமிழ்ப்படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் கடைசியாக நடித்த படம் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். 1999ல் பிரசாந்துடன் ஜோடி படத்திலும் நடித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அம்மா கேரக்டர்களில் அதிகமாக நடித்து தாய்மார்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.