நிவாரணம் கொடுக்க வந்த டிஆரின் கையைப் பிடிச்சு இழுத்த பெண்! பதறி போய் என்ன செய்தார் தெரியுமா?

by Rohini |
tr
X

tr

Actor T.Rajendran: ரஜினி , கமல் கோலிவுட்டையே ஆட்டிபடைத்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு தனி மனித ஆளாக ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் நடிகர் டி.ராஜேந்திரன். பெரும்பாலும் காதல் கதைகள், அண்ணன் தங்கச்சி சம்பந்தப்பட்ட கதைகளை மையப்படுத்தி பெரும்பாலான குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் இயக்கி, நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றிப் பெற்றது. நடிப்பு, இசை, பாடல் என பன்முகத்திறமைகள் கொண்ட நடிகராக வலம் வந்தார் டி.ஆர். அதன் பிறகு அரசியல் என தன் வழியை மாற்றிக் கொண்டவர் இப்போது படங்களில் நடிக்காமல் உடல் நலம் கருதி ஓய்வில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: நிறைவேறாம போன வினுசக்கரவர்த்தியின் ஆசை… சிலுக்கை அவர் எப்படி கண்டுபிடித்தார் தெரியுமா?..

சமீபத்தில் கூட அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் அமெரிக்கா வரை சென்று சிகிச்சை மேற்கொண்டு வந்தார் டி.ஆர். இந்த நிலையில் இன்று மிக்ஜாம் புயல் நிவாரணமாக ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்களை கொடுக்க வந்தார் டி.ஆர்.

அதுவும் சிம்புவின் மன்றம் சார்பாக அந்த நிவாரணம் கொடுக்கப்பட்டது. இது ஒரு சாதாரண ரசிகர் மன்றமாக இல்லாமல் மக்கள் நலன் மன்றமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என கூறினார். அதுமட்டுமில்லாமல் புயல் , வெள்ளத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இன்று அவர்களின் முகத்தை பார்க்கவே என் உடலையும் பொருட்படுத்தாமல் இங்கு நேரிடையாக வந்திருக்கிறேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஸ்லிம் உடம்பு சும்மா சிக்குன்னு இருக்கு!. ஓவர்டோஸ் அழகில் சொக்க வைக்கும் பூஜா ஹெக்டே..

நிவாரணம் வாங்க வந்த பெண்கள் சிலர் டி.ஆரின் கையை பிடித்து குலுக்க முயன்றனர். ஆனால் டி.ஆர். அதை தவிர்த்து வந்தார். அதில் ஒரு பெண் வலுக்கட்டாயமாக டி.ஆரின் கையை பிடிச்சு இழுத்து கைகுலுக்க முயன்றார். ஆனால் டி.ஆர் வேண்டாம்மா.. இது போதும்மா என கையை கொடுக்கவே இல்லை. டி.ஆர் நடிக்கும் போதே எந்த ஹீரோயினையும் தொட்டு நடித்ததே இல்லை. நடிக்கவும் மாட்டாராம். அதை அவர் கொள்கையாகவே வைத்திருக்கிறார். அதை இன்று வரை பின்பற்றி வருகிறார்.

Next Story