Connect with us
VC, Silk

Cinema History

நிறைவேறாம போன வினுசக்கரவர்த்தியின் ஆசை… சிலுக்கை அவர் எப்படி கண்டுபிடித்தார் தெரியுமா?..

தமிழ்த்திரை உலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் இவர். பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். குணச்சித்திர நடிகர்னாலே வினுசக்கரவர்த்தி தான் என்று பெயர் எடுத்து விட்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 1000த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தான் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். அது ஒரு சுவையான சம்பவம். இவர் ஒரு முறை மாவு அரைக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பெண்ணைப் பார்த்தாராம். அந்தப் பெண் சட்டென்று திரும்பிப் பார்க்கும்போது இவரது கண்களை சுண்டி இழுத்துவிட்டாராம். மெல்ல அவரிடம் பேச ஆரம்பித்துள்ளார் வினுசக்கவர்த்தி.

silksumitha

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும் அவரது பெயர் விஜயமாலா என்றும் தெரிந்து கொண்டார். மேலும் அவர் தமிழகத்திற்கு வந்தே 17 நாள்கள் தான் ஆகிறதாம். அதன்பிறகு வினு, சினிமாவில் நடிக்கிறாயா என கேட்க, தான் ஊர் திருவிழாக்களில் நடனம் ஆடியிருப்பதாகவும் அதுதான் விருப்பம் எனவும் சொல்லி இருக்கிறார் அந்தப் பெண்.

தொடர்ந்து வினுசக்கரவர்த்தி நடிப்பு குறித்து அந்தப் பெண்ணுக்கு 12 நாள்கள் பயிற்சி கொடுத்தாராம். தொடர்ந்து அந்தப் பெண் நடித்த முதல் படம் வண்டிச்சக்கரம். அவர் தான் சில்க். அவரைப் பார்த்ததும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் எங்கிருந்துடா கொண்டு வந்த? ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலக்கிடுவார் பாரு என சொல்ல அப்படியே நடந்ததாம்.

Vinu Chakravarthy

Vinu Chakravarthy

அதன்பிறகு ரஜினி, கமல், சிவகுமார் என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து தமிழ்த்திரை உலகின் தவிர்க்க முடியாத கவர்ச்சி கன்னி நடிகையானார் சில்க். சில்க் உதட்டைக் கடித்துக்கொண்டு கண்களால் தூண்டில் போடும் கிறக்கப் பார்வையைப் பார்க்கும்போது எப்பேர்ப்பட்ட துறவிக்குமே உற்சாக மூடு கிளம்பி விடும் என்றே சொல்லலாம்.

ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என்று நினைத்தாராம் வினு. ஆனால் அது கடைசி வரை நிறைவேறாமலே போனதாம். மேற்கண்ட தகவலை வினுசக்கரவர்த்தியின் மனைவி சித்ரா லட்சுமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா இவ்வளவு உதவிகள் செய்திருக்காரா?!.. அட ஆச்சர்யமா இருக்கே..

google news
Continue Reading

More in Cinema History

To Top