Categories: Cinema News latest news

எல்லாரையும் கெடுத்துட்டாரு விஜய்!.. அந்த சூப்பர் ஸ்டாரும் சரக்கு பாட்டிலுடன் பாட்டு போட்டுருக்காரே!

நடிகர் விஜய் தொடர்ந்து தனது ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்களில் குடிப்பழக்கத்தை புரமோட் செய்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டை சோஷியல் மீடியாவில் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டுகளாக முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், அகில உலக சூப்பர் ஸ்டாரும் தற்போது சரக்கு பாட்டிலுடன் பாடல் ஒன்றை போட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே வா குவாட்டர் கட்டிங் என சரக்கை தொட்ட மிர்ச்சி சிவா கெட்டுப் போன நிலையில், மீண்டும் சூது கவ்வும் 2 படத்திற்காக மண்டைக்கு சூரு ஏறுதே.. சூரு.. பீரு.. காரு என ரைமிங்காக பாடலை போட்டு பாடல் முழுவதும் சரக்கு பாட்டிலை குடித்துக் கொண்டே இருப்பது போல பாடல் காட்சியை உருவாக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: ஒரே ஒரு ஃபிளாப் கொடுத்து லைஃப்-ஐ தொலைத்த 5 இயக்குனர்கள்!.. படம் பண்ணி பல வருஷம் ஆச்சே!..

எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், ஹரிஷா, ராதா ரவி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூது கவ்வும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் போட்ட “காசு துட்டு பணம் மணி மணி” பாடல் இப்போ கேட்டாலும் மஜாவா இருக்கும். ஆனால், இந்த பாடல் பெரிதாக ஈர்க்கவில்லை.

குடிகாரர்கள் கொண்டாடும் பாடலாக வேண்டுமானால் இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்த சூது கவ்வும் படத்தை முடிந்தவரை கெடுக்காமல் விட மாட்டர்கள் போல என படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை பார்த்து ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைவர்171 புரோமோ டயலாக்கை லோகேஷ் எங்கிருந்து சுட்டிருக்கார் பாருங்க… திருப்பதிக்கே லட்டா?

தளபதி விஜய் படத்திலேயே சரக்கு பாடல் இடம்பெற்று வெற்றி பெற்று வரும் நிலையில், இளைஞர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு நல்ல உதாரண புருஷராக விஜய் மாறியுள்ளார் என்றும் இனிமேல் பாட்டிலுடன் தான் எல்லா ஓப்பனிங் சாங்கும் ஓப்பனாகும் என தெரிகிறது.

சூது கவ்வும் நாடும் நாட்டு மக்களும் என்கிற டைட்டிலில் இந்த படம் உருவாகி உள்ள நிலையில், தர்மம் வெல்லும் என 3ம் பாகம் வேறு வரும் என பகீரை கிளப்பியுள்ளார்.

Published by
Saranya M