உனக்கு 24 எனக்கு 44.. பிரேம்ஜியின் கல்யாணம் உண்மை தானாம்… பலருக்கு ஹார்ட் அட்டாக் கன்பார்ம்!..

Published on: January 2, 2024
---Advertisement---

Premji Amaran: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சம் பெற்றவர் கங்கை அமரன். இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும் அவர் கொடுத்த படங்கள் இன்றும் அவர் புகழை பேசிக்கொண்டு இருக்கிறது. இவரின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி.

ஹீரோவாக படங்களில் நடித்த வெங்கட் பிரபுவுக்கு அது செட்டாகவில்லை. அதனால் அதை விடுத்து சென்னை28 படத்தினை இயக்கினார். இதில் மிர்ச்சி சிவா, அகத்தியன் மகள் விஜயலெட்சுமி, ஜெய், ஆகாஷ் அரவிந்த், வசந்த் விஜய், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: இந்த பட்ஜெட்டுக்கு இப்படினா? 50கோடி கொடுத்தா தமிழில் ஒரு பாகுபாலியை காட்டிருவாங்க – சிவகார்த்திகேயன் பாராட்டிய படம்

வேற லெவல் ஹிட் கொடுத்தது அத்திரைப்படம். இதில் அறிமுகமான பிரேம்ஜி பின்னர் அந்த படத்தில் நடித்த நடிகர்கள் நடித்த வேறு படங்களிலும் நடித்து வந்தார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய அண்ணனுடனே எப்போதும் இருப்பார். 

அதனாலே, வெங்கட் பிரபு தன்னுடைய தம்பியை தன் எல்லா படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் ரிலீஸான மாநாடு படத்திலும் நடித்து இருந்தார் பிரேம்ஜி. இவரும் நிதின் சத்யாவின் தோழா, ஜெய்யின் அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

44 வயதாகும் பிரேம்ஜி தன்னை எலிஜிபில் பேச்சுலர் எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். சமீபத்திய புத்தாண்டி போஸ்டில் கூட இந்த வருடம் கண்டிப்பாக எனக்கு கல்யாணம் ஆகும் என பதிவிட அவர் காமெடி பண்ணுவதாகவே சிலர் நினைத்தனர். ஆனா அதான் உண்மையாம்.

இதையும் படிங்க: இந்த வருசத்தோட மிகப்பெரிய உருட்டு இதுவா தான் இருக்கும்..! நிக்சன் நீங்களாம் திருந்த வாய்ப்பே இல்ல..!

விரைவில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் செய்யப்பபட்டு வருகிறதாம். இந்த வருடத்துக்குள் அவருக்கு திருமணம் நடக்குமாம். அதிலும் காதல் திருமணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் காதலை சொல்ல 24 வயதாகும் அவரும் ஓகே சொல்லியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஏற்கனவே ரெட்டின் கிங்ஸ்லி, சங்கீதா திருமணம் முடிந்து ரசிகர்கள் கவலையில் இருக்கும் நிலையில் பிரேம்ஜி காதல் திருமணம் செய்யும் அந்த 24 வயது பெண்ணும் எதும் நடிகையாக இருந்து விட்டால் நெஞ்சு வலியே வந்திருமே என ரசிகர்கள் இப்போதே கிசுகிசுக்கின்றனர்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.