சூப்பர் ஹிட் அடித்த சூரியின் கருடன்!.. சந்தானத்தை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்.. வேறலெவல் மீம் பாருங்கோ!..

சந்தானம் நடிப்பில் வெளியான இங்க நான் தான் கிங்கு திரைப்படம் இதுவரை 4 கோடி ரூபாய் வசூலை கூட தொடாத நிலையில் முதல் நாளிலேயே சூரி நடித்த கருடன் திரைப்படம் அதிகபட்சமாக 4.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அப்டேட் ஆன தகவல்கள் வெளியாகி உள்ளன.

துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் படத்தைக் கொடுத்து மிகப்பெரிய ஹீரோவாக மாற்றினார். காக்கி சட்டை படமும் சிவகார்த்திகேயனுக்கு உச்சத்தை கொடுத்தது. தனுஷை வைத்து கொடி மற்றும் பட்டாஸ் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் விடுதலை படத்தின் ரயில் விபத்து காட்சியையும் படமாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்ன மனுஷன்யா? விஜய்கிட்ட இருந்து கண்டிப்பா இத கத்துக்கனும்.. மைக் மோகனா சொன்னது?

நடிகர் சூரி பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். ஆனால் ஒரு சில படங்களில் மட்டுமே அவரது காமெடி ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தது. பல படங்களில் மொக்கை காமெடிகளை போட்டு வந்த சூரி அவரே ஒரு கட்டத்தில் போர் அடித்து விட்டார் போல தெரிகிறது. இதற்கு மேல் காமெடிக்கு பதிலாக சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்த சூரி முதல் படமே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க நடிப்பு பயிற்சி பக்காவாக மேற்கொண்டு தூள் கிளப்பியுள்ளார்.

நடிகர் சூரிக்கு முன்னதாக பல வருடங்களுக்கு முன்னதாகவே நடிகர் சந்தானம் ஹீரோவாக மாறிவிட்டார். ஆனால், இதுவரை ஒரு படத்தில் கூட அவர் ஹீரோ போல நடிக்கவே இல்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிப்பதற்கு பதிலாக மீண்டும் காமெடியனாக நடிக்க வரலாம் என மீம் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நீங்க மாலை போட்டதுக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும்? இளையராஜாவை சீண்டிய பாக்கியராஜ்

சூரியை மறுபடியும் காமெடி செய்யவே வரவேண்டாம் என்றும் சீரியசாக நடிப்பதிலேயே சிறப்பாக நடித்து வருகிறார் என அந்த மீமில் இருவரையும் கம்பேர் செய்து போட்டு பங்கம் பண்ணியுள்ளனர்.

கருடன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக சூரி மாறிவிட்டார் என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். அரண்மனை 4 படத்தின் வெற்றிக்குப் பிறகு சூரி நடித்துள்ள கருடன் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘பச்ச குழந்தையினு பாலூட்டி வளர்த்தேன்’ ரேஞ்சுக்கு ஷங்கரை தள்ளிவிட்ட சித்தார்த்! ‘இந்தியன் 2’வில் இப்படி பண்ணிட்டாரே

Related Articles
Next Story
Share it