சூரிக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா! ஹீரோயின் என்ன ஐயா படத்துல வர நயன்தாரா மாதிரி இருக்காரே!..

0
773

எதிர் நீச்சல், கொடி, காக்கி சட்டை என சிவகார்த்திகேயன், தனுஷை வைத்து இயக்கி வந்த துரை செந்தில்குமார் இயக்கத்தில்  சூரி நடித்துள்ள கருடன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது யுவன் இசையில் யுவன் பாடி வெளியாகி இருக்கிறது.

பஞ்சவர்ண கிளியே என சூரி ரொமான்ஸ் லுக் விட்டு நடித்துள்ள இந்த பாடலில் சூரியை விடுங்கப்பா அந்த ஹீரோயின் ரேவதி சர்மா யாருப்பா வட இந்தியாவில் இருந்து கொண்டு வந்து பாவாடை சட்டை போட்டு விட்டாங்களா என்றே ரசிகர்கள் ஆர்வமுடன் அவரை வட்டமிட ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒல்லியா இருக்காருன்னு பார்த்தா!.. பெல்லியை வச்சு இப்படி டான்ஸ் ஆடுறாரே!.. பிரதீப் யோகக்காரன் தான்!..

ஐயா படத்தில் இதே போலத்தான் நயன்தாராவும் பாவாடை சட்டையில் அழகாகவும் அதே சமயம் கவர்ச்சி தூக்கலாகவும் நடித்திருப்பார். அதே போல இவரும் இருக்காரே என ரசிகர்கள் பாடல் முழுக்க சூரியை அவுட் ஆஃப் ஃபோகஸ் செய்து விட்டு ரேவதி சர்மாவை பார்த்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி சினிமாவில் நடிக்கச் சென்ற ரோஷினி ஹரிப்ரியன் தான் சூரிக்கு ஜோடியா என ரசிகர்கள் ஆரம்பத்தில் நினைத்த நிலையில், இந்த படத்தில் அவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மொய்தீன் பாயை மொக்கை பாயா மாத்துனதே பெரிய பாய் தான்!.. தொடர்ந்து இப்படி சொதப்புறாரே!..

யுவன் சங்கர் ராஜா குரலில் நல்லதொரு காதல் பாடலாக அமைந்துள்ள பஞ்சவர்ணக்கிளியே பாடல் காதலர் தின ட்ரீட்டாக வெளியாகி உள்ளது.

ஆனால், நா. முத்துகுமார் வரிகள் மிஸ்ஸிங் என்பதால் பாடல் வரிகள் பெரிதாக ஈர்க்கவில்லை. கொரியோகிராஃபி கூட பெரிதாக எடுபடவில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. எதிர்நீச்சல் படம் வந்து பல வருடங்கள் ஆகின்றன. அந்த படத்தில் இருந்த அளவுக்கு கூட கொரியோகிராஃபியை சூரிக்காக ஏன் செய்யவில்லை என்கிற கேள்வி எழுகிறது.

google news